நிவாரண நிதி இணையப்பக்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

நிவாரண நிதி இணையப்பக்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

1 mins read
fe67f67a-00b5-4f7c-add6-fcdfbe095889
தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் (என்­டி­யுசி) இணை­யப்­பக்­கம் செயல்­ப­டத் தொடங்­கிய முதல் நாளான நேற்று முன்­தி­னம், அள­வுக்கு அதி­க­மான விண்­ணப்­பங்­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தால் அது முடங்­கி­யது.  அதைத் தொடர்ந்து, இணை­யப்­பக்­கத்­தில் வரிசை முறை ஒன்­றைச் சேர்ப்­ப­தற்­காக அது தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து பய­னீட்­டா­ளர்­களுக்கு தெரி­விக்க என்­டி­யு­சி­யின் சுய­தொழில் செய்­வோ­ருக்­கான பிரிவு அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதிவு ஒன்றை நேற்று வெளி­யிட்­டது.  -

சுய­தொ­ழில் செய்­வோர், அர­சாங்க நிவா­ரண நிதி­யைப் பெறு­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள இணை­யப்­பக்­கம் ஒன்று தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளது.

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் (என்­டி­யுசி) இணை­யப்­பக்­கம் செயல்­ப­டத் தொடங்­கிய முதல் நாளான நேற்று முன்­தி­னம், அள­வுக்கு அதி­க­மான விண்­ணப்­பங்­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தால் அது முடங்­கி­யது.

அதைத் தொடர்ந்து, இணை­யப்­பக்­கத்­தில் வரிசை முறை ஒன்­றைச் சேர்ப்­ப­தற்­காக அது தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து பய­னீட்­டா­ளர்­களுக்கு தெரி­விக்க என்­டி­யு­சி­யின் சுய­தொழில் செய்­வோ­ருக்­கான பிரிவு அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதிவு ஒன்றை நேற்று வெளி­யிட்­டது.

எனி­னும், இணை­யப்­பக்­கம் எப்­போது மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கும் என்­பது குறித்த விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

அர­சாங்க நிவா­ரண நிதிக்கு விண்­ணப்­பிக்க தற்­போது காலக்­கெடு எது­வும் இல்லை என்று பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு என்­டி­யுசி உத்­த­ர­வா­தம் அளித்­துள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக வரு­மா­னம் இழந்து தவிக்­கும் சுய­தொ­ழில் செய்­வோ­ருக்கு உத­வும் நோக்­கு­டன் கடந்த மாதம் 26ஆம் தேதி அர­சாங்க நிவா­ரண நிதி அறி­விக்­கப்­பட்­டது. நிவா­ரண நிதிக்­குத் தகுதி பெறு­வோருக்குப் படிப்­ப­டி­யாக ஒன்­பது மாதங்­க­ளுக்கு $9,000 வழங்­கப்­படும்.