வாடகைக் கழிவை நீட்டித்தது கம்ஃபர்ட்டெல்குரோ

வாடகைக் கழிவை நீட்டித்தது கம்ஃபர்ட்டெல்குரோ

2 mins read
2f639997-e760-4747-8f2d-311ed9175cee
கோப்புப்படம்: எஸ்டி, லிம் யோஹுய் -

சிங்­கப்­பூ­ரின் ஆகப்­பெ­ரிய டாக்சி நிறு­வ­ன­மான கம்­ஃபர்ட்டெல்­குரோ, தனது டாக்சி ஓட்­டு­நர்­களுக்கு வாட­கைக் கழிவை நீட்­டித்­து உள்ளது. எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­ன­மும் இதேபோன்று ஜூன் 1ஆம் தேதி வரை வாட­கைக் கழிவை நீட்­டித்­துள்­ள­தாக அறி­யப்­ப­டு­கிறது.

கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அதி­ரடி நட­வ­டிக்­கை­களை ஜூன் 1ஆம் தேதி வரை அர­சாங்­கம் நீட்­டித்­துள்­ள­தால் டாக்சி நிறு­வ­னங்­களும் வாட­கைக் கழிவை நீட்­டிக்க முன் வந்­துள்­ளன. அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ள் நடப்புக்கு வந்த முதல் மாதத்தில் நாள் ஒன்­றுக்கு ஒரு டாக்­சிக்கு $100 வரை வாட­கை­யில் கழிவு வழங்­கு­வ­தாக அனைத்து டாக்சி நிறு­வ­னங்­களும் அறி­வித்­திருந்தன.

இம்­மா­தம் 22ஆம் தேதி அதி­ரடி நட­வ­டிக்­கை­கள் மேலும் ஒரு மாதம் நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக அர­சாங்­கம் அறி­வித்­த­தும், கம்­ஃபர்ட் டெல்­குரோ தனது வாட­கைக் கழிவை மேலும் ஒரு மாதம் நீட்­டிப்­ப­தா­கக் கூறி­யது.

இந்நிலை­யில், கம்­ஃபர்ட்டெல்­கு­ரோ­வின் சலு­கையை தாங்­களும் பின்­பற்­றப்­போ­வ­தாக மற்ற டாக்சி நிறு­வ­னங்­கள் கூறி­யி­ருந்­தன.

ஆனால், இரண்­டா­வது ஆகப்­பெ­ரிய டாக்சி நிறு­வ­ன­மான டிரான்ஸ்கேப், மே 6ஆம் தேதி­யிலி­ருந்து ஜூன் 1ஆம் தேதி வரை­ நாள் ஒன்­றுக்கு $21.40 கட்­ட­ண­மாக வசூ­லிக்­கப்­படும் என்று கடந்த திங்­கட்­கி­ழமை கூறி­யது.

இத­னால் டாக்சி ஓட்­டு­நர்­க­ளி­டையே சர்ச்சை வெடித்­துள்ளது.

"இது நியா­யமே இல்லை, கம்ஃபர்ட்டெல்­குரோ வாட­கை­யில்­லா­மல் சலுகை வழங்­கும்­போது டிரான்ஸ்­கேப் நிறு­வ­னத்­தால் ஏன் முடி­ய­வில்லை," என்று டாக்சி ஓட்டுநர்­களில் ஒரு­வ­ரான 62 வயது லோ சூன் மின் கேள்­வி­ எழுப்­பி­னார்.

மற்­றொரு டிரான்ஸ்­கேப் ஓட்­டு ­ந­ரான 52 வயது டாய் சூன் வாய், "தற்­போது ஆபத்­தாக இருப்­ப­தால் டாக்சி ஓட்ட வேண்­டாம் என்று என்­னு­டைய குடும்­பத்­தி­னர் கூறு கின்றனர். ஆனால் பிழைப்புக்காக பணம் சம்­பா­தித்­தாக வேண்­டுமே," என்­றார் அவர்.

இந்த நிலை­யில், இதற்­குப் பதி­ல­ளித்த டிரான்ஸ்­கேப்­பின் பொது நிர்­வா­கி­யான ஜாஸ்­மின் டான், வாட­கையே இல்­லா­மல் சலுகை வழங்­கு­வது கட்­டுப்­ப­டி­யா­காது என்­றார்.

"தற்­போ­துள்ள சூழ்­நி­லையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கி­றோம், தேவை ஏற்­பட்­டால் படிப்­ப­டி­யாக உத­வி­களை செய்­வோம்," என்று அவர் மேலும் தெரி வித்தார்.

பிரி­மி­யர் டாக்­சிஸ், பிரைம் டாக்சி ஆகிய இரண்டு நிறு­வ­னங்­களும் அரசாங்கத்தின் அதி­ரடி நட­வ­டிக்­கை நீட்டிக்கப்பட்ட பிறகு எந்­த­வித அறி­விப்­பையும் வெளி­யி­ட­வில்லை.

ஆனால் பிரைம் டாக்சி நிறு­வ­னத் தலை­வர் நியோ நாம் ஹெங், டிரான்ஸ்கேப் வாட­கைக் கட்­ட­ணத்­தைத் தாங்களும் பின்­பற்­றப் போவ­தா­கத் தெரி­வித்தார்.