உணவு விநியோகச் சேவையில் கம்ஃபர்ட்டெல்குரோ

உணவு விநியோகச் சேவையில் கம்ஃபர்ட்டெல்குரோ

2 mins read
f5611e82-903d-4221-ab1a-d2be984fae49
கோப்புப்படம்: எஸ்டி, லிம் யோஹுய் -

சிங்­கப்­பூ­ரில் டாக்சி சேவை வழங்­கும் முன்­னணி நிறு­வ­ன­மான கம்ஃபர்ட்­டெல்­குரோ, டாக்சி ஓட்­டு­நர் களுக்கு உத­வும் வகை­யில் உணவு விநி­யோ­கச் சேவை­யைத் தொடங்­கி­யுள்­ளது. கிரு­மிப் பர­வ­லைக் கட்டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அதி­ரடி நட­வடிக்­கை­களை ஜூன் 1ஆம் தேதி வரை அர­சாங்­கம் நீட்­டித்­துள்­ள­ இந்த நேரத்­தில் கம்­ஃபர்ட்­டெல்­கு­ரோ­வின் இந்த அறி­விப்பு, டாக்சி ஓட்­டு­நர்­க­ளுக்கு சற்று நம்­பிக்­கை­யைத் தரு­வ­தாக உள்­ளது.

பய­ணி­களின்றி குறைந்த வரு­வாய் ஈட்­டும் டாக்சி ஓட்­டு­நர்­கள் இந்­தத் திட்­டத்­தின் வாயி­லா­கப் பயன்­பெ­று­வர். கம்­ஃபர்ட்டெல்­குரோ நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான ஏறக்­கு­றைய 10,000 வாடகை உந்­து­வண்­டி­கள் இந்­தச் சேவை­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. உணவு, பானக்­க­டை­கள் தங்­கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வேண்­டிய பண்­டங்­களை இந்த டாக்சி மூலம் அனுப்­பி­வைப்­பர். இந்த உணவு விநி­யோ­கச் சேவை காலை 9 மணி முதல் இரவு 10 வரை நடப்­பில் இருக்­கும்.

கடந்த வியா­ழக்­கி­ழமை 'த பெர்­னாக்­கன்', 'த ஸ்ட்­ரெய்ட்ஸ் கிளான்'ஸ் கின்' ஆகிய உண­வ­கங்­க­ளு­டன் இணைந்து கம்­ஃபர்ட்­டெல்­குரோ முன்­னோட்­டச் சேவை ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இந்த உணவு விநி­யோ­கச் சேவைக்கு தூரத்­தைப் பொறுத்து, கட்­ட­ணம் $6.50ல் இருந்து வசூ­லிக்­கப்­படும். ஒரே பதி­வில் இரண்டு இடங்­க­ளுக்­குச் சேவை­யாற்ற வேண்­டு­மெ­னில் தூரத்­தைப் பொறுத்து கட்­ட­ணம் $8.50 முதல் வசூ­லிக்­கப்­படும்.

கம்­ஃபர்ட்­டெல்­கு­ரோ­வின் செயலி மூலம் ஓட்­டு­நர்­கள் தங்­க­ளுக்­கான உண­வு விநியோகச் சேவை­யைப் பெறுவர். மற்ற நிறு­வ­னங்­க­ளின் உணவு விநி­யோ­கச் சேவை­யைப் போல் அல்­லா­மல் டெல்­கு­ரோ­வின் இந்­தச் சேவை­யின் மூலம் ஈட்­டப்­படும் வரு­மா­னம் யாவும் டாக்சி ஓட்­டு­நர்­க­ளுக்கே போய்ச் சேரும் என்று அந்­நி­று­வ­னம் தெரி­வித்­தது.