கொரோனா கிருமி பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டிருக்கும் அதிரடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள தனது டாக்சி ஓட்டுநர்களுக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் வாடகை விலக்கு அளித்திருந்தது. அந்த விலக்கை ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிப்பதாக நேற்று எஸ்எம்ஆர்டி அறிவித்தது. இந்த உதவித் திட்டத்தால் அந்நிறுவனத்திற்கு கூடுதலாக S$6 மில்லியன் செலவாகும். இதையும் சேர்த்து எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது டாக்சி ஓட்டுநர்களுக்காக $20 மில்லியன் செலவிடுகிறது.
டாக்சி வாடகைக் கட்டண விலக்கை எஸ்எம்ஆர்டி நீட்டித்தது
1 mins read
கொரோனா கிருமி பரவல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தனது டாக்சி ஓட்டுநர்களுக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் அளித்த வாடகை விலக்கை தற்போது நீட்டித்துள்ளது. படம்: எஸ்டி, ஜின் டே -

