வெளிநாட்டு ஊழியர்களுக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் உணவுப் பொருட்கள் நன்கொடை

வெளிநாட்டு ஊழியர்களுக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் உணவுப் பொருட்கள் நன்கொடை

2 mins read
a389c354-4b46-4adf-99f6-44deba822db4
வெஸ்ட்லைட் டொ குவான், வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ், வெஸ்ட்லைட் ஜுனிபர் ஆகிய விடுதிகளில் தங்கியிருப்போருக்கு 10,000 வாழைப் பழங்களை சுமிஃப்ரூ சிங்கப்பூர் நிறுவனம் நேற்றும் இன்றும் வழங்கியுள்ளது. படம்: சுமிஃப்ரூ சிங்கப்பூர் -

நாட்டில் கிருமிப்பரவலை முறியடிக்கும் அதிரடி நடவடிக்கைகள் நடப்புக்கு வந்து ஒரு மாத காலம் நிறைவடையவுள்ள இந்த நேரத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் உதவி தேவைப்படுபவர்களுக்கும் உணவு நிறுவனங்கள் நன்கொடை வழன்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

'தி ஃபுட் பேங் சிங்கப்பூர்', 'ஃபுட் ஃபார்ம் தி ஹார்ட்' உட்பட லாபநோக்கற்ற அமைப்புகளுடன் இணைந்து டோல் பேக்கேஜ்டு ஃபுட்ஸ் வோர்ல்ட்வைட் நிறுவனம் பழங்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள் போன்றவற்றை, உதவி தேவைப்படும் சுமார் 300,000 சிங்கப்பூரர்களுக்கு வழங்குகிறது.

ஆசிய அளவில் முதல் நிலை சுகாதாரப் பணியாளர்கள், தளவாடப் பணியாளர்கள், பங்காளிகள் போன்றோருக்கும் பேரங்காடிகள், 24 மணி நேர கடைகள் போன்றவற்றில் பணிபுரிவோருக்கும் பராமரிப்புப் பொட்டலங்களை வழங்க டோல் திட்டமிடுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி வரும் ItsRainingRaincoats அமைப்புடன் சேர்ந்து வெளிநாட்டு ஊழியர்களுக்காக 3,000 பீட்சாக்களை நாளை வழங்கவுள்ளது பீட்சா ஹட் உணவு நிறுவனம்.

வெஸ்ட்லைட் டொ குவான், வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ், வெஸ்ட்லைட் ஜுனிபர் ஆகிய விடுதிகளில் தங்கியிருப்போருக்கு 10,000 வாழைப் பழங்களை சுமிஃப்ரூ சிங்கப்பூர் நிறுவனம் நேற்றும் இன்றும் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணிப்பெண்கள் ஆகியோருக்காக முகக்கவசங்களை உற்பத்தி செய்து விநியோகிக்க சுமார் $3 மில்லியன் மதிப்பிலான நன்கொடைகளை அரசு சாரா அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் போன்றவை MaskForce எனும் முயற்சியின் கீழ் வழங்கின. அந்த முயற்சியை முன்னுதாரணமாகக் கொண்டு உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்க முன்வந்ததாக சுமிஃப்ரூ நிறுவனத்தின் நிதிக் கட்டுப்பாட்டாளார் திருவாட்டி ஏஞ்செலா கோ குறிப்பிட்டார்.