முதற்கட்ட கட்டுப்பாடு தளர்வு: மீளவிருக்கும் சேவைகளில் சில

முதற்கட்ட கட்டுப்பாடு தளர்வு: மீளவிருக்கும் சேவைகளில் சில

1 mins read
5a4979c7-3c16-4e79-8a5c-585852521b84
படம்: எஸ்டி, கெவின் ஃபூ, ஜின் தே -

ஜூன் 2 முதல், சந்திப்புக்கான முன்பதிவு அடிப்படையில் இயங்கவிருக்கும் சேவை நிலையங்கள் பற்றி பொதுச் சேவைப் பிரிவு அறிவித்துள்ளது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மைய அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் உள்ள சேவை முகப்புகள்.

மத்திய சேம நிதி அலுவலகத்தின் ஐந்து சேவை நிலையங்கள். வருவாய் கட்டடத்தில் அமைந்துள்ள வரிசெலுத்துவோர் மற்றும் வர்த்தக சேவை நிலையங்கள். நில உரிமை பரிவர்த்தர்னைகளுக்கான சிங்கப்பூர் நில ஆணையத்தின் சேவை முகப்புகளும் இவற்றுள் அடங்கும்.

வேலை அனுமதி அட்டை (எம்ப்ளாய்மெண்ட் பாஸ்) சேவை நிலையம். கிராஞ்சி, மாஜு ராணுவ முகாம்களில் தனிநபர் உடலுறுதித் தேர்வுக்கு முன்பதிவு செய்தோருக்கான சேவைகள்.

சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தேர்வு நிலையம். சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் மாணவர் சுகாதார மையம்.

- என பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் சேவைகளை அணுகுவது தொடர்பாக அந்தந்த அமைப்புகளின் இணையத்தளங்களில் தகவல் பெறலாம்.

பள்ளிக்கூடங்களில் உள்ள குறிப்பிட்ட சில பல் மருந்தகங்கள் மீண்டும் செயல்படும். அவற்றுக்குச் செல்ல முன்பதிவு அவசியமில்லை.

நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கும் என்றபோதிலும் சாத்தியப்படும் இடங்களில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் வழியாக அது நிகழும்.