வேலை ஆதரவுத் திட்டம் விரிவாக்கம்; மேலும் ஒரு மாதத்திற்கு சம்பள வழங்குத் தொகை 

நிறுவனங்கள் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்காமல் தக்கவைத்துக்கொள்ள உதவும் நோக்கில் வேலை ஆதரவுத் திட்டத்தை அரசாங்கம் பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது. 

ஒன்பது மாதங்களுக்கு ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் நிறுவனங்களுக்கு அத்திட்டத்தின்கீழ் வழங்கும். அந்த வழங்குத் தொகையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்  இன்று தெரிவித்தார். 

ஆகஸ்ட் மாத சம்பளத்திலும் ஒரு பகுதியை வழங்கும் அரசாங்கம், அக்டோபர் மாதம் வழங்கப்படும் வழங்குத் தொகையில் அதை சேர்த்து கொடுக்கும். 

கொவிட்-19 கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் ஜூன் 1ஆம் தேதி முடிவுக்கு வரும்போது இன்னும் வர்த்தகத்தைத் தொடங்க முடியாத நிறுவனங்களுக்கு ஊழியர்களின் சம்பளத்தில் 75% அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இத்திட்டத்தின்கீழ் 1.9 மில்லியன் சிங்கப்பூர் ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் வழங்குகிறது. சம்பளத்தின் முதல் $4,600யில் 25 முதல் 75% வரை அரசாங்கம் வழங்குத் தொகையாகத் தருகிறது. 

இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 23.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.