சுடச் சுடச் செய்திகள்

வேலையிடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள்

ஜூன் 2ஆம் தேதி மீண்டும் செயல்படுவதற்கு முன்னதாக, கிருமிப் பரவலைத் தடுத்து, பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து வர்த்தகங்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கேள்விகளும் விளக்கங்களும்


1) பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் கட்டாயமா, அவற்றை யார் செயல்படுத்துவது?

ஆம், ஊழியர்களுக்கு பாதுகாப்பான வேலையிடச் சூழலை வழங்குவதற்கும்; ஜூன் 2ஆம் தேதி வேலையிடத்தில் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கு முன்பாக அங்கு கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கும் அனைத்து வர்த்தகங்களும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயமாகும். வர்த்தகங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, https://covid.gobusiness.gov.sg/safemanagement/general என்ற இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு விதிமுறைகளுடன், அவற்றுக்கு பொருந்தக்கூடிய, துறை சார்ந்த விதிமுறைகளையும் கடைப்பிடிப்பது கட்டாயம்.


 

2) ஜூன் 2ஆம் தேதி எனது ஊழியர்கள் அனைவரும் மீண்டும் வேலைக்கு வரலாமா?

முடியாது. வீட்டிலிருந்து வேலை செய்வது இயல்பு நிலை வேலை முறையாக இருப்பதுடன், வர்த்தகங்கள் தொலைத்தொடர்புகளை அதிகபட்சம் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, மெய்நிகர் கூட்டங்களை நடத்துவதுடன், முடிந்தவரை மின்னிலக்க பயன்பாடு மூலம் சேவைகள் வழங்கப்பட வேண்டும்.

தற்போது வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் அப்படியே தொடர வேண்டும். மாற்று வழிகள் இல்லாத நிலையிலும், பணியிடம் செல்ல வேண்டியது அவசியமாகும்போது மட்டுமே ஊழியர்கள் அலுவலகத்திற்குச் செல்லலாம். எடுத்துக்காட்டாக, வீட்டிலிருந்து பயன்படுத்த முடியாத கணினி இயக்கங்களையும் சாதனங் களையும் பயன்படுத்த, அல்லது சட்டபூர்வ தேவைகளை நிறைவேற்ற அவசியம் ஏற்பட்டால் (எ.கா. ஒப்பந்தங்கள் அல்லது பரிவர்த்தனைகளை நிறைவேற்ற).

ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வசதிகளை வர்த்தகங்கள் வழங்க வேண்டும். இன்னமும் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களின் செயல்முறைகளை நிறுவனங்கள் மறுஆய்வு செய்ய வேண்டும். ஊழியர்களுக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதுடன் வேறு இடங்களிலிருந்து பணிபுரிவதையும் இணையம் வழியான ஒருங்கிணைப்புகளையும் வழங்க வேண்டும்.

குழுக்களாகப் பிரித்தல், வெவ்வேறு நேரங்களில் வேலை மற்றும் ஓய்வு நேரங்களை வழங்குதல், ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தது ஒரு மீட்டர் பாதுகாப்பான தூர இடைவெளியை உறுதிப்படுத்துதல், ஊழியர் அனைவரின் விவரங்களையும் பதிவு செய்ய, பாதுகாப்பான நுழைவாயிலை அமைத்தல் போன்ற பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் வர்த்தகங்கள் வேலையிடத்தில் செயல்படுத்த வேண்டும்.


 

3) எனது ஊழியர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது அனுமதிக்கப்படுகிறதா?

இல்லை. ஊழியர்கள் வேலையிடத்திலும் (எடுத்துக் காட்டு- கேன்டீன்/ பான்ட்ரி) அதற்கு வெளியிலும் சக ஊழியர்களுடன் கூடிப் பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.


 

4) எனது ஊழியர்களும் வருகையாளர்களும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது?

வர்த்தகங்கள் பணியை மீண்டும் தொடங்குவதற்கு முன்பாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதையும் அதுகுறித்து ஊழியர்கள் அறிந்து இருப்பதையும் முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கும் வருகையாளர்களுக்கும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற நினைவூட்டுவதற்கு அறிவிப்புகளையும் வைக்க வேண்டும். மின்னஞ்சல், துண்டறிக்கை, அறிவிப்புப் பலகை போன்ற உட்தகவல் தொடர்பு கட்டமைப்புகள் மூலம் தங்களது பாதுகாப்பு நடைமுறைகளை ஊழியர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான செயல்முறையை முதலாளிகள் ஏற்படுத்த வேண்டும்.


 

5) பணியிடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் நான் செயல்படுத்தியிருந்தால், ஜூன் 2 ஆம் தேதிக்கு முன்னதாக எனது வர்த்தகத்தை மீண்டும் தொடங்க முடியுமா?

கிருமிப் பரவல் முறியடிப்பு காலத்தில் செயல்பட வர்த்தக, தொழில் அமைச்சிடமிருந்து ஒப்புதல் பெற்ற வர்த்தகங்கள் மட்டுமே ஜூன் 2க்கு முன்னர் வேலையிடத்தில் இயங்கலாம். முதல் கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள், சேவைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற வர்த்தகங்கள் [https://covid.gobusiness.gov.sg/guides/permittedserviceslist.pdf] ஜூன் 2ஆம் தேதி முதல் மீண்டும் பணியிடத்தில் செயல்படலாம்.


 

6) பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்தாத வர்த்தகங்களுக்கு எதிராக என்ன அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

பாதுகாப்பை உறுதிப்படுத்த முறையான நடவடிக்கைகளை செயல்படுத்தாத முதலாளிகள், அவ்வாறு செய்யும் வரை அவர்களின் செயல்பாட்டிற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்படலாம்.

கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இணங்கத் தவறினால் $10,000க்கு மேற்போகாத அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் இணங்கத் தவறுவோருக்கு $20,00க்கு மேற்போகாத அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


 

2020 ஜூன் 2ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படக்கூடிய சேவைகளின் பட்டியலுக்கு:

https://covid.gobusiness.gov.sg/guides/permittedserviceslist.pdf

 

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள், துறை சார்ந்த விதிமுறைகளுக்கு:

https://covid.gobusiness.gov.sg/safemanagement/general (“பாதுகாப்பு நிர்வாக நிபந்தனைகள்”)

 

வருகைப் பதிவின் தகவல்களுக்கு:

go.gov.sg/safeentry-visitor-management-system

 

ஏனைய ஆதரவு நடவடிக்கைகள் பற்றி அறிய:

covid.gobusiness.gov.sg

 

கேள்விகள் உள்ளனவா?

அழையுங்கள்: 6898 1800

 

நேரடித் தொலைபேசி சேவை செயல்படும் நேரம்:

காலை 8.30 மணி மாலை 5.30 மணி (திங்கள்- வெள்ளி)

காலை 8.30 மணி பிற்பகல் 1 மணி (சனிக்கிழமை)

*பொது விடுமுறை நாட்களில் செயல்படாது

 

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon