வெளிநாட்டு ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு நிகழ்ச்சி

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இணையம் வழி கற்றல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்க மும் லிஷா இலக்கிய மன்றமும் ஏற்பாடு செய்துள்ளன.

இந்த நிகழ்ச்சிகளை https://www.Facebook.com/ProjectDorm எனும் இணையப் பக்கத்தின் வழியாகப் பார்வையிடலாம். உள்ளூர் பாடகர்கள் தீபன் கணேஷ், சுமா ஷெனாய், தமிழகத்திலிருந்து அபிஷேக் ராஜீ, இசையமைப்பாளர்கள் பிரசாத் -கணேஷ், பிரபல தொலைக்காட்சி மற்றும் smule பாடகி ரம்யா துரை சாமி வழங்கும் இசை நிகழ்ச்சியும் சொற்பொழிவாளர் சக்தி ஜோதி, தமிழ் செம்மல் S.D கலையமுதன், அண்ணா சிங்காரவேலு, பிரபல கவிஞர் மனுஷ்ய புத்திரன், விஜய் டிவி புகழ் மணிகண்டன் ஆகி யோரின் தன்முனைப்புச் சொற் பொழிவுகளும் நடைபெற இருக் கின்றன.