44,000 வெளிநாட்டு ஊழியர்களின் கைபேசி கட்டண அட்டையில் $10 பணம் நிரப்பப்பட்டது

நோன்­புப் பெரு­நாள் மகிழ்ச்­சி­யைத் தங்­கள் தாய்­நாட்­டில் இருக்­கும் குடும்­பத்­தா­ரு­டன் பகிர்ந்­து­கொள்­ளும் பொருட்டு 44,000 வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் கைபே­சிக் கட்­டண அட்­டை­யில் $10 நிரப்­பப்­பட்­டது

தங்­க­ளது எம்1, சிங்­டெல், ஸ்டார்­ஹப் கட்­டண அட்­டை­யில் இம்­மா­தம் 1ஆம் தேதி­யன்று பணம் இல்­லா­த­வர்­க­ளின் கட்­டண அட்டை களுக்கு $10 தானி­யக்க முறை­யில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல் திங்­கட்­கி­ழமை வரை நிரப்­பப்­பட்­டது என்று TWC2 எனும் வெளி­நாட்டு ஊழி­யர் நல அமைப்பு நேற்று தெரி­வித்­தது.

நோன்­புப் பெரு­நாள் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று கொண்­டா­டப்­பட்­டது.

இத்­திட்­டத்­துக்­கான பெரும்­பா­லான நிதி­யா­த­ரவை ஃபேஸ்புக், சிங்­கப்­பூர் சமூக அற­நி­று­வ­னம் ஆகி­யவை வழங்­கின என்­றும் TWC2 அமைப்பு கூறி­யது.

இச்­ச­லு­கை­யு­டன், மேலும் 10,000 பணம் நிரப்­பும் கட்­டண அட்­டை­கள் தங்­கும் விடு­தி­க­ளாக மாற்­றப்­பட்ட தொழிற்­சா­லை­களில் தங்­கி­யி­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­குக் கொடுக்­கப்­படும்.

வெளிநாட்டு ஊழியர்களின் கைபேசி கட்டண அட்டையில் பணம் நிரப்பி உதவும் TWC2 அமைப்பின் திட்டம் வழி கடந்த ஏப்ரல் 5ஆம் தேதியிலிருந்து இது வரை $1 மில்லியன் செலவிடப் பட்டுள்ளது.

இவ்­வி­யக்­கம் இது­வரை 90,000க்கு மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உத­வி­யுள்­ளது என்று தெரி­வித்த TWC2 அமைப்பு, சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றும் கட்­டு­மான ஊழி­யர்­களில் மூன்றில் ஒரு பகு­தி­யி­னர் இவர்­கள் என்­றும் கூறி­யது.

கைபேசி கட்­டண அட்­டை­யில் பணம் நிரப்­பும் இத்­திட்­டம் கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ ண­மாக புதி­தாக மருத்­து­வ­மனை­களில் சேர்க்­கப்­பட்­டி­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் உத­வி­யுள்­ளது.

சுகா­தார அமைச்சு அதி­கா­ரி­கள் அந்த வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தொடர்­பு­த் தடங்­க­ளைக் கண்­ட­றி­ய­வும் இந்தத் திட்டம் உதவி­ யிருக்­கிறது.

மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­பட்ட பிறகு தங்­கள் உட­மை­களை அவர்­கள் எடுக்க முடி­ய­வில்லை என்­ப­தால், அவர்­கள் தங்­கி­யி­ருக்­கும் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு கைபேசி மின்­னேற்­றிக் கரு­வி­கள் அனுப்­பப்­பட்­டன.

“எங்களைப் போன்ற சிறிய அரசு சார்பற்ற அமைப்பால் இதுபோன்ற பெரிய திட்டங்களை எங்களுக்கு ஆதரவு அளித்துள்ள பல அமைப்புகளின் உதவியின்றி செய்திருக்க முடியாது,” என்றார் TWC2 அமைப்பின் தலைவர் திருவாட்டி டெபி ஃபோர்டிஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!