மேலும் 506 பேருக்குக் கிருமித் தொற்று; சமூகத்தில் ஐவருக்குத் தொற்று

மேலும் 506 பேருக்குக் கிருமித் தொற்று; சமூகத்தில் ஐவருக்குத் தொற்று

1 mins read
c93c4bd5-d131-46f8-8ccf-24bf1bb8cb27
-

சிங்கப்பூரில் மேலும் 506 பேருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தவாசிகள். மேலும் மூவர் வேலை அனுமதி சீட்டுடன் சமூகத்தில் தங்கியிருப்பவர்கள்.

பெரும்பாலான கிருமித் தொற்று சம்பவங்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இன்றைய எண்ணிக்கையைச் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் இதுவரை 34,366 பேருக்குக் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று ஆக அதிகமாக கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டுருந்த 1,337 நோயாளிகள் வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19,622.