சுடச் சுடச் செய்திகள்

‘கிராப்’ வாடகை காரின் ஓட்டுநருக்குப் பக்கத்தில் பயணி அமர இம்மாத இறுதியில் தடை

கிராப் வாடகை காரில் பயணம் செய்ய முன்பதிவு செய்வோர் அந்த காரின் ஓட்டுநருக்குப் பக்கத்தில் பயணி அமர விரைவில் தடை விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் காரில் பயணம் செய்வோர் ஒவ்வொரு முறையும் சுகாதார உறுதிமொழி படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். 

கொரோனா கிருமித் தொற்று தொடர்பில் இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இதுவும் சில என்று கிராப் நிறுவனம் இன்று தெரிவித்தது. 

"மேம்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எங்கள் நிறுவனம் எங்கள் வாகனங்களுக்குள் பாதுகாப்பு இடைவெளியை நடைமுறைப்படுத்துவோம்.

"அந்த வகையில் எங்கள் வாகன ஓட்டுநர்களுக்குப் பக்கத்தில் பயணி அமர தடை விதிக்கப்படும். அப்படி என்றால் நான்கு பேர் அமரக்கூடிய காரில் இப்போது மூன்று பேர்தான் அமர முடியும்," என்று கிராப் விவரித்தது. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon