பாவாடைக்குள் படம் எடுத்தவருக்கு நன்னடத்தை கண்காணிப்பு உத்தரவு

பாவாடைக்குள் படம் எடுத்தவருக்கு நன்னடத்தை கண்காணிப்பு உத்தரவு

1 mins read
6bee2e58-2cb0-452a-a72d-dffac252949d
-

தமது சொந்த பள்ளி உட்பட வெவ்வேறு இடங்களில் கைபேசியைக் கொண்டு பல பெண்களின் பாவாடைக்குள் படமெடுத்த ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் ஒருவருக்கு 18 மாத நன்னடத்தை கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவின் ஒரு பகுதியாக ரேசன் சீ ருவிய் ‌ஷெங் எனும் அந்த 20 வயது மாணவர் தினந்தோறும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளியே செல்லக்கூடாது.

அது போக, 100 மணி நேரம் சமூகச் சேவையையும் அவர் புரிய வேண்டும்.

அவரது நன்னடத்தையை உறுதிசெய்ய அவரது பெற்றோருக்கு $5,000 பிணை வழங்கப்பட்டுள்ளது.