இருவித கல்விமுறைகளை இணைக்க ஆலோசனை

கொவிட்-19 நோய்த்­தொற்­றுக்கு மருந்து கண்­டு­பி­டிக்க ஓராண்டோ அதற்கு மேலோ கூட ஆகக் ­கூ­டும் என்­ப­தா­லும் சமூ­கத்­தில் புதிய தொற்று குறைந்­தி­ருப்­ப­தா­லும் பள்­ளிக்­கூ­டங்­க­ளைத் திறக்க இதுவே சரி­யான தரு­ணம் என்று கல்வி அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்து உள்­ளார்.

நீண்ட காலத்­துக்கு பள்­ளி­களை மூடு­வது என்­பது கல்­விப் பரு­வத்­தில் மட்­டு­மல்­லாது உணர்வு ரீதி­யா­க­வும் சமூக ரீதி­யா­க­வும் பிள்­ளை­க­ளி­டம் பெரி­ய­தொரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

“கல்வி என்­பது தேர்­வுக்­கா­ன­தும் நல்ல மதிப்­பெண்­களை பெறு­ வ­தற்­கா­ன­தும் மட்­டு­மல்ல நடத்தை மற்­றும் சமூக உணர்வு மேம்­பாடு தொடர்­பா­ன­தும்­கூட. ஒரு முழு தலை­மு­றை­யின் அத்­த­கைய அனு­ ப­வங்­களை நாம் பறித்­து­வி­ட­லா­காது,” என்­றும் திரு ஓங் தெரி­வித்­தார்.

நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நேற்று முன்­தி­னம் முடி­வுக்கு வந்த பின்­னர் நேற்று சில பிள்­ளை­க­ளுக்­கான பள்­ளி­கள் திறக்­கப்­பட்­டன. அவற்­றில் ஒன்­றான ஜூரோங் வெஸ்ட்­டில் அமைந்­தி­ருக்­கும் சிங்­னான் தொடக்­கப் பள்­ளிக்கு காலை­யில் அமைச்­சர் ஓங் வரு­கை­ய­ளித்­தார். அப்­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், “பாது­காப்பு நடை­மு­றை­களும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் நடப்­பில் இருப்­ப­தால் படிப்­ப­டி­யாக பள்­ளி­கள் திறக்­கப்­படும்,” என்று தெரி­வித்­தார்.

வகுப்­பறை கற்­றல் முறை, மின்­னி­லக்க இணை­யம்­வழி கற்­றல் முறை ஆகிய இரண்­டின் சிறந்த பலன்­க­ளைப் பெறும் வகை­யில் அவற்றை எவ்­வாறு இணைப்பது என்­பது பற்றி கல்வி அமைச்சு ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் அப்­போது அவர் கூறி­னார்.

ஒரு மாத காலம் முழுக்க முழுக்க வீட்­டி­லி­ருந்து கல்வி கற்ற நடை­முறை நிறைய அம்­சங்­க­ளைக் கற்­றுத் தந்­தி­ருப்­ப­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

“வீட்­டி­லி­ருந்து பாடம் படிப்­பது, மின்­னி­லக்க இணை­யம்­வழி கற்­றல் போன்­றவை வகுப்­ப­றைக் கல்­விக்கு மாற்­றாக அமைய முடி­யாது என்­பதை நாம் தெரிந்து வைத்­தி­ருக்­கி­றோம். இருந்­த­போ­தி­லும் ஒரு மாதம் முழு­வ­தும் வீட்­டி­லி­ருந்­த­வாறே கல்வி கற்­கும் நிலைக்கு நாம் தள்­ளப்­பட்­டோம். அந்­தப் புதிய முறை­யி­லும் சிறந்து விளங்­கக் கற்­றி­ருக்­கி­றோம்.

“வகுப்­ப­றைக் கல்­வி­மு­றை­யில் இல்­லாத சிறப்­பம்­சங்­கள் இணை­யம்­வழி கற்­ற­லில் இருப்­பதை நாம் இப்­போது அறிந்­தி­ருக்­கி­றோம்,” என்று அவர் குறிப்­பிட்­டார். வகுப்­ப­றைக்கு வெளியே சுய­மா­கக் கற்­ற­லில் மாண­வர்­கள் ஈடு­ப­டு­வது என்­பது மின்­னி­லக்­கக் கற்­ற­லின் பலத்தை உணர்த்­து­கிறது என்­றார் அவர்.

“இவற்றை முன்­னெ­டுத்­துச் செல்­லும் வகை­யில் கல்வி அமைச்­சில் மிகப்­பெ­ரி­ய­தொரு மறு­ஆய்வு நடை­பெற்று வரு­கிறது. வகுப்

­ப­றைக் கல்வி, மின்­னி­லக்­கக் கல்வி ஆகிய இரண்­டை­யும் கலப்­பது தொடர்­பாக சிறந்த திட்­டத்தை வகுப்­பதைப் பற்றிய ஆய்வு அது. இவ்­வி­ரண்­டி­லும் உள்ள சிறப்­பு­

க­ளைப் பெற அவற்றை ஒன்­று­சேர்ப்­பது நவீன கல்வி முறைக்­குப் பொருத்­த­மாக இருக்­கும். எனவே இதனை மிக விரை­வில் நாம் நடை­மு­றைப்­ப­டுத்த இருக்­கி­றோம். முழுக்க முழுக்க வீட்­டி­லி­ருந்து கற்­பது என்­னும் ஏற்­பாட்டை பள்­ளி­கள் திடீ­ரென செய்ய வேண்டி இருந்தது என்­ப­தால் அவற்­றில் மேம்­பாடு காண­வேண்­டிய அம்­சங்­கள் இன்­னும் நிறைய உள்­ளன,” என்று திரு ஓங் தெரி­வித்­தார்.

இதற்கிடையே சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று பாலர் பள்ளி ஒன்றுக்கு வருகையளித்தார். பாதுகாப்பு நடைமுறைகளை அமல் படுத்த மேற்கொண்ட முயற்சி களுக்காக எல்லா பாலர் பள்ளிகள் மற்றும் பணியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ‘கொவிட்-பாதுகாப்பு ஏபிசி’ பற்றி எடுத்துச் சொல்லி பிள்ளைகளிடம் கற்பிப்ப தில் பெற்றோரும் தங்கள் பங்கை ஆற்றலாம் என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!