கொவிட்-19 விதிமீறல் 7 பேர் மீது குற்றச்சாட்டு

கொவிட்-19 விதிமுறைகளை மீறி­ய­தாக ஒரு பெண் உள்­ளிட்ட எழு­வர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்­றம் சாட்­டப்­பட்­டது. நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­த­போது ராபர்ட்­சன் கீ வட்­டா­ரத்­தில் ஒன்­று­கூ­டி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்ட அவர்­கள் அனை­வ­ரும் நேற்று நீதி­மன்­றத்­திற்கு வந்­தி­ருந்­த­னர்.

திட்­டம் நடப்­பில் இருந்­த­போது சமூக ஒன்­று­கூ­டல்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்டு இருந்­தது. அதனை மீறி­ய­தால் எழு­வ­ரும் கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) சட்­டத்­தின்­கீழ் குற்­றம் புரிந்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­க­ளின் பெயர்­கள் வெளி­யி­டப்­பட்­டன. நீல் கார்­டன் புக்­கன், 30, ஜேம்ஸ் டைட்­டஸ் பீட், 33, ஜோசப் வில்­லி­யம் போய்ன்­டர், 25, பெர்ரி ஸ்காட் பிளைர், 37, மைக்­கல் ஸெர்னி, 45, ஜெஃப்ரி ஜார்ஜ் பிர­வுன், 52. இவர்­க­ளோடு பாவ் நியு­யென் பிர­வுன், 40, என்­னும் மாது­வும் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­களில் அடங்­கு­வார்.

மேலும் ஜெஃப்ரி ஜார்ஜ் பிர­வு­னின் மனைவி இவர் என்று அறி­யப்­ப­டு­கிறது.

கிட்­டத்­தட்ட 14 ஆண்டுகள் சிங் ­கப்­பூ­ரில் வாழ்ந்த இம்­மாது­வின் மகன் இங்­குள்ள பள்­ளி­யில் படிப்­ப­தாக இவ­ரைப் பிர­தி­நி­தித்த வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

இந்த ஏழு பேரில் நால்­வர் பிரிட்­ட­னைச் சேர்ந்­த­வர்­கள். இரு­வர் அமெ­ரிக்­கா­வை­யும் ஒரு­வர் ஆஸ்­தி­ரி­யா­வை­யும் சேர்ந்­த­வர்­கள்.

கடந்த மாதம் 16ஆம் தேதி மாலை 6.19 மணிக்­கும் 6.44 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் ராபர்ட்­சன் கீ வட்­டா­ரத்­தில் உள்ள மெர்­பாவ் ரோட்­டில் இத்­தா­லிய உண­வ­கம் அருகே இந்த எழு­வ­ரில் நால்­வர் சமூக நோக்­கத்­திற்­காக ஒன்று­ கூ­டி­ய­தா­கக் குற்­றச்­சாட்­டில் தெரி ­விக்­கப்­பட்­டது.

மற்ற மூவர் டேப் அட் ராபர்ட்­சன் கீ என்­னும் மது­பா­னக் கூடம் அருகே அன்று மாலை 6.08 மணிக்­கும் 6.40 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் ஒரு­வரை ஒரு­வர் சந்­தித்­துக்­கொண்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது.

குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­களில் ஆஸ்­தி­ரிய நாட்­ட­வ­ரான மைக்­கல் ஜெர்னி சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசி என்­றும் அவ­ரது இரு பிள்­ளை­கள் இங்­குள்ள பள்­ளி­யில் படிப்­ப­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

ராபர்ட்­சன் கீ வட்­டா­ரத்­தில் சிலர் ஒரு மீட்­டர் பாது­காப்பு இடை­வெளி­ யைக் கடைப்­பி­டிக்­கா­மல் கூட்­ட­மாக இருந்­த­தைக் காட்­டும் படங்­கள் கடந்த மாதம் சமுக ஊட­கங்­களில் பர­வின. அவர்­களில் பெரும்­பா­லா­னோர் முகக்­க­வ­சம் அணி­யா­ம­லும் சிலர் தங்­க­ளது முகக்­க­வ­சத்தை வாய்க்­குக் கீழே இறக்­கி­விட்­ட­வா­றும் படங்­களில் காணப்­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!