சுடச் சுடச் செய்திகள்

அதிபர் ஆலோசகர் மன்றத்திற்கு புதிய நியமனங்கள்

அதிபர் ஹலிமா யாக்கோப், சிபிஏ எனப்படும் அதிபர் ஆலோசகர் மன்றத்திற்கு ஓர் உறுப்பினரையும் மாற்று உறுப்பினர் ஒருவரையும் நியமித்துள்ளார்.

மாற்று உறுப்பினராக இதுவரை இருந்துவந்த 'சிங்டெல்; குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுவா சொக் கூங், நேற்று உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மன்றத்தில் 12 ஆண்டுகள் சேவையாற்றி முடித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்டிஃபன் லீ சிங் யென்னின் இடத்தில் திருவாட்டி சுவா பணியாற்றுவார்.

எக்ஸ்ஸான்மொபில் ஏஷிய பசிஃபிக் பிரிவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கான் சியாவ் கீ நேற்று மாற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு கான் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் துணை தலைவராகவும் பணியாற்றுகிறார். 

அதிபரின் அதிகாரங்கள் குறித்து அதிபர் ஆலோசனை மன்றம் அறிவுறுத்தலை வழங்கும். இந்த மன்றத்தில் உள்ள எட்டு உறுப்பினர்களும் இரண்டு மாற்று உறுப்பினர்களும் அதிபரால் நியமிக்கப்படுபவர்கள் அல்லது பிரதமர், தலைமை நீதிபதி, பொதுச்சேவைத்துறையின் தலைவர் ஆகியோரால் முன்மொழியப்படுபவர்கள்.

உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகவும் மாற்று உறுப்பினர்களின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாகவும் உள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon