பாரந்தூக்கியை இயக்கும் ஊழியர் மரணம்

பாரந்தூக்கியை இயக்கும் ஊழியர் மரணம்

1 mins read
ec3f1347-bc66-413d-9343-d60cb4f74f55
-

பாரந்தூக்கியை இயக்கும் ஊழியர் ஒருவர், அந்தப் பாரந்தூக்கிக்கும் லாரி ஒன்றின் கதவுக்கும் இடையே சிக்குண்டு உயிரிழந்திருக்கிறார்.

டிஎன்கேஎச் தளவாட நிறுவனத்தின் பெஞ்சுரு ரோட்டில் 62 வயது சிங்கப்பூர் ஆடவர் பாரந்தூக்கியை இயக்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் லாரி ஒன்றுக்குப் பக்கத்தில் நிறுத்தி அதன் கதவுகளைத் திறக்க முயன்றார்.

ஆனால் பாரந்தூக்கி திடீரென பின்திசையின் சென்றபோது அவர் பாரந்தூக்கியின் அடிச்சட்டத்திற்கும் லாரியின் கதவுக்கும் இடையே சிக்கினார்.

பிற்பகல் சுமார் 2.15 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் போலிசாருக்கும் இந்தச் சம்பவம் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் அவர் அசைவின்றிக் கிடந்தவாறு காணப்பட்டார்.

சுயநினைவு இழந்த நிலையில் அவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். கடுமையான காயங்களால் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்வதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.