5,400க்கும் அதிகமான இல்லப் புதுப்பித்தல் பணிகள் தொடர அனுமதி

கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நடப்பில் இருந்தபோது வீடுகளைப் புதுப்பிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் கடந்த திங்கட்கிழமையுடன் நிறைவடைந்தது.

5,400க்கும் அதிகமான இல்லப் புதுப்பிப்புப் பணிகள் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கட்டட, கட்டுமான ஆணையம் நேற்று தெரிவித்தது.

புதுப்பிப்புப் பணிகளைத் தொடர அனுமதி கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களான படிவங்கள் அனைத்தும் முறையாக இருந்தால் இரண்டு நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று ஆணையம் கூறியது.

ஒப்பதல் கிடைத்தவுடன் தனியார் வீடுகளிலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளிலும் வசிக்கும் ஊழியர்களைக் கொண்டு புதுப்பிப்புப் பணிகளை ஒப்பந்தக்காரர்கள் உடனடியாக தொடரலாம்.

கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நடப்பில் இருந்தபோது 28 நாட்கள் வீட்டிலேயே இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்ட இந்த ஊழியர்கள் வேலை தொடங்கும் முன் கிருமித்தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை.

இருப்பினும், ஆணையத்தின் அனுமதியைப் பெற்றாலும் புதுப்பிப்புப் பணிகளில் தாமதம் ஏற்படக்கூடும் என்று ஆணையம் கூறியது. ஒப்பந்தக்காரர்களின் ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் இருந்தால் அந்த ஊழியர்கள் மீண்டும் வேலையில் சேர பல அமைச்சுகளைக் கொண்ட பணிக் குழு அனுமதி தரும் வரை காத்திருக்க வேண்டும்.

மலேசிய ஊழியர்களைக் கொண்டுள்ள ஒப்பந்தக்காரர்களும் உள்ளனர்.

மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக அந்த மலேசிய ஊழியர்களால் சிங்கப்பூருக்குள் வர இயலாது.

புதுப்பிப்புப் பணிகளுக்காக தேவைப்படும் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஒப்பந்தக்காரர்கள் சிலர் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

அனைத்து கட்டுமான ஊழியர்களும் வேலைக்குத் திரும்பியதும் அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்த மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தால் அவர்கள் உடனடியாக வேலை செய்வதை நிறுத்த வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர்.

இல்லப் புதுப்பிப்புப் பணிகள் இரண்டு கட்டங்களாக தொடரும் என்று கடந்த மாதம் 27ஆம் தேதியன்று ஆணையம் அறிவித்திருந்தது. ஏற்கெனவே தொடங்கிவிட்ட புதுப்பிப்புப் பணிகள் முதலில் தொடர அனுமதிக்கப்படும். அதையடுத்து புதிய புதிப்பிப்புப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். புதிய புதுப்பிப்புப் பணிகள் தொடங்குவதற்கான தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதுப்பிப்புப் பணிகளைத் தொடர விரும்பும் ஒப்பந்தக்காரர்கள் form.gov.sg எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று புதுப்பிப்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் முகவரி, ஊழியர்களின் பெயர், அடையாள அட்டை எண், ஊழியர்களின் தங்குமிடம் போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

வேலை அனுமதிச் சீட்டு, எஸ் பாஸ் வைத்திருக்கும் புதுப்பிப்புப் பணி ஊழியர்கள், இணையம் மூலம் நடத்தப்படும் ஊழியர்களுக்கான கொவிட்-19 பாதுகாப்புப் பயிற்சிக்கு இந்த இணையத்தளம் வழியாக பதிவு செய்ய வேண்டும்.

இணையம் மூலம் நடத்தப்படும் இந்தப் பயிற்சியைப் பூர்த்தி செய்வதற்கு முன்பே ஊழியர்கள் வேலை செய்ய தொடங்கலாம். பயிற்சிகளுக்கான தேதி, நேரம் ஆகியவை தொடர்பாக ஆணையத்துடன் ஏற்பாடு செய்யத் தேவையில்லை.

கட்டுமானத் துறைக்கான பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் பயிற்சிக்குப் புதுப்பிப்புப் பணி ஒப்பந்தக்காரர்கள் தங்கள் ஊழியர்களை அனுப்ப வேண்டியதில்லை.

கட்டுமானத் தளங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே அந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!