சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ ‘சிக்கி’ சிறப்புப் பணிக்குழு

கொவிட்-19 கிருமித்தொற்று நெருக்கடியில் இருந்து மீள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் விதமாக சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபை (சிக்கி) கொவிட்-19 பணிக்குழுவை அமைத்திருக்கிறது.

கொவிட்-19 தொற்றைச் சமாளிப்பது, மின்னிலக்கமயத்தையும் அனைத்துலகமயத்தையும் ஊக்குவிப்பது ஆகிய இரு அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என அண்மையில் ‘சிக்கி’யின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட டாக்டர் டி.சந்துருவும் புதிய துணைத் தலைவரான திரு சந்திரமோகன் ரத்தினமும் ‘தி பிஸ்னஸ் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலின்போது தெரிவித்தனர்.

கடந்த மாதம் 15ஆம் தேதி ‘சிக்கி’யின் புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றுக்கொண்டதும் ‘சிக்கி’ கொவிட்-19 பணிக்குழுவை அமைப்பதே அதன் முதல் பணியாக இருந்தது. கொவிட்-19 நிவாரணத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்வது, நிதியுதவி பெறுவது, வர்த்தகச் சூழல் மேம்படத் தொடங்கியதும் புதிய வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளும் விதமாக தொடர்ந்து தங்களை மேம்படுத்திக்கொண்டு தயார்நிலையில் இருப்பது போன்ற அம்சங்களில் இந்திய வர்த்தகங்களுக்கு உதவ அந்தப் பணிக்குழு இலக்கு கொண்டுள்ளது.

“நாங்கள் நெருக்கடியான சூழலில் இருக்கிறோம். கொரோனா நோய்ப் பரவல் ஒட்டுமொத்த வர்த்தகச் சமூகத்தையும் பாதித்திருக்கிறது. சிறிய நாடான, வர்த்தக மையமான சிங்கப்பூரையும் அது விட்டுவைக்கவில்லை. ஒரு தொழிற்சபையாக நாங்கள் வர்த்தகச் சமூகத்திற்குக் கைகொடுக்க வேண்டியது அவசியம். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மீது கவனம் செலுத்துவதே எங்களது உடனடிப் பணி,” என்றார் ‘மாடர்ன் மான்டிசோரி இன்டர்நேஷன்ல்’ பள்ளிக் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான திரு சந்துரு.

‘ராஜா அண்ட் டான்’ சட்ட நிறுவனத்தின் பங்காளிகளில் ஒருவரான திரு சந்திரமோகன் பணிக்குழுவின் தலைவராகச் செயல்படுவார். தொழிற்சபையின் இயக்குநர்களான திரு பார்த்திபன் முருகையனும் திரு ஜே.கே.சரவணாவும் அவருக்கு உதவியாக இருப்பர்.
“நிறுவனங்களுக்கும் அரசாங்க அமைப்புகளுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாக இருக்க நாங்கள் விரும்புகிறோம். பல்வேறு திட்டங்கள் குறித்து நிறுவனங்கள் அறிந்துகொள்ள உதவுவோம். குறிப்பாக, அந்தத் திட்டங்கள் உதவியாக இருக்கின்றனவா அல்லது அவை மேம்படுத்தப்பட வேண்டும் என கருதுகிறார்களா என்பதை நிறுவனங்களிடம் கேட்போம்,” என்றார் திரு சந்திரா.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முதலில் அரசாங்க உதவித் திட்டங்கள் குறித்து ஆராயவும் அதன்பின் குறைந்த வட்டி விகிதத்தில் தவணை முறையில் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியுமா அல்லது திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிப்போட முடியுமா என தங்களது வங்கிகளில் கேட்டறியவும் ‘சிக்கி’ ஊக்குவிக்கிறது.

‘சிக்கி’யும் வங்கிகளைச் சென்றடைந்து, தாங்கள் பரிந்துரைக்கும் நிறுவனங்கள் எளிதில் தொடர்புகொள்ள ஏதுவாக பிரத்தியேகமாக ஒருவரை அல்லது ஒரு குழுவை நியமிக்கும்படி கேட்டுக்கொண்டு இருப்பதாக திரு சந்திரா கூறினார்.

எந்த முயற்சியும் கைகூடவில்லை எனில், இறுதி முயற்சியாக பணிக்குழு பட்டியலிட்டுள்ள, நிதியுதவி வழங்கவல்ல சில இந்திய நிறுவனங்களை உள்ளடக்கிய நிதித் தெரிவுகளை நிறுவனங்கள் நாடலாம். அவை அதிக வட்டி விகிதத்தைக் கொண்டிருக்கலாம் என்ற திரு சந்திரா, ஆனாலும் தனது உறுப்பினர்களுக்குச் செயல்பாட்டுக் கட்டணத் தள்ளுபடி அல்லது சிறப்பு வட்டி விகிதம் பெற்றுத் தருவது தொடர்பில் ‘சிக்கி’ பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

புதிய ஒழுங்குமுறைகள் அல்லது மேம்பாடுகள் குறித்து சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அறிந்துகொண்டு, பலன்பெற உதவும் வகையில், அறிவிப்புகள் வெளியானதும் விரைவில் அதுபற்றிய விளக்கக் குறிப்புகளைப் பரப்ப பணிக்குழு நோக்கம் கொண்டுள்ளது. இதற்கிடையே, மீட்சித்திறனை வளர்க்கவும் வரும் ஆண்டுகளில் வளர்ச்சியை எட்ட அடித்தளமிடவும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ ‘சிக்கி’ விரும்புகிறது. அந்த வகையில், ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னிலக்கமய முயற்சியை அது முடுக்கிவிடவுள்ளது. கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்ட ‘சிக்கி’யின் அனைத்துலக வர்த்தகப் பிரிவு, நிறுவனங்கள் பிற நாடுகளில் கால்பதிக்க ஊக்குவிக்கும்.

மின்னிலக்கமயமாக விரும்பும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ‘எஸ்எம்இசென்டர்@லிட்டில் இந்தியா’ உதவி வருகிறது.
மின்னிலக்கமயமாவதை ஊக்குவிக்க அரசாங்கம் $500 மில்லியனுக்குமேல் ஒதுக்கி இருக்கும் நிலையில் நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திரு சந்துரு வலியுறுத்தி இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!