தற்காலிக வசிப்பிடங்களில் 32,000 ஆரோக்கியமான வெளிநாட்டு ஊழியர்கள்

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொரோனா கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியாக விளையாட்டரங்குகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் குடியிருப்புக் கட்டடங்கள், ராணுவ முகாம்கள் ஆகியவற்றில் 32,000க்கு மேற்பட்ட ஆரோக்கியமான வெளிநாட்டு
ஊழியர்கள் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார்.

அங்கிருக்கும் போது ஊழியர்களுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள மருத்துவக்கூடங்கள், மருந்தகங்கள், மருத்துமனைகள் ஆகியவற்றுக்கு அவர்களின் உடல்நிலையைப் பொறுத்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் திரு ஸாக்கி, இன்று நாடாளுமன்றத்
தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தார்.

“கொவிட்-19 தொடர்பான பரிசோதனையை மேற்கொண்ட ஊழியர்கள், அதன் முடிவுகள் தெரியும் வரை எச்சில்/சளி மாதிரிகளைக் கொண்டு மேற் கொள்ளப்படும் சுகாதாரப் பரிசோதனை வசதியைக் கொண்ட தனிமைப்படுத்தப்படும் வசிப்பிடத்தில் தங்கவைக்கப்படுவர். அவர்களுக்கு கொவிட்-19 கிருமித் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அதற்கு தகுந்த பராமரிப்பு வசிப்பிடத்துக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள்,” என்றும் அமைச்சர் கூறினார்.

“வெளிநாட்டு எங்கு தங்கியிருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பராமரிப்பும் கவனிப்பும் அளிக்கப்படும். மே மாத இறுதி நிலவரப்படி, கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட 30,000 வெளிநாட்டு ஊழியர்களில் கிட்டத்தப்பட்ட பாதி பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். எஞ்சிய
ஊழியர்க ள் நல்ல முறையில் குணமடைந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்,” என்றும் திரு ஸாக்கி தெரிவித்தார்.