சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 33 ஆடவர்கள் கைது

சட்டவிரோத குதிரைப்பந்தயத்துக்கு எதிராக தீவு முழுவதும் நடத்தப்பட்ட போலிசின் திடீர்  சோதனையில் 33 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 81 வயது ஆடவரும் அடங்குவார்.

இம்மாதம் 3ஆம் தேதி இந்நடவடிக்கை தோ பாயோ, யூனோஸ் கிரசெண்ட், பூன் லே பிளேஸ் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது $9,000  ரொக்கம், கைபேசிகள், சட்டவிரோத பந்தயக் குறிப்புகளைக் கொண்ட புத்தகங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட 33 ஆடவர்கள் மீது சட்டவிரோத சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுடன் பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை மீறியதற்கான குற்றச்சாட்டும் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.