இன்று புதிதாக 344 பேருக்குக் கிருமித் தொற்று; சமூகத்தில் 7 பேருக்குப் பரவல்

இன்று புதிதாக 344 பேருக்குக் கிருமித் தொற்று; சமூகத்தில் 7 பேருக்குப் பரவல்

1 mins read
c4030135-f407-4a7a-b541-9fe8270aee8e
-

கொவிட்-19 கிருமித் தொற்றால் இன்று புதிதாக 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஏழு பேர் சமூகத்தில் பரவல் ஏற்பட்டு நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலவரத்துடன் சேர்த்து இந்நாட்டில் இதுவரை 37,527 பேருக்குக் கிருமித் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.