மத்திய விரைவுச்சாலையில் விபத்தில் கார் நசுங்கியது; 32 வயது ஆடவர் மரணம்

மத்திய விரைவுச்சாலையில் விபத்தில் கார் நசுங்கியது; 32 வயது ஆடவர் மரணம்

1 mins read
f4c225e4-352a-40a0-b09e-af2f23fcafe1
-

இன்று காலை மத்திய விரைவுச்சாலையில் நடந்த மோசமான விபத்தில் 32 வயது ஆடவர் மரணமடைந்தார்.

சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிய மத்திய விரைவுச் சாலை, ஜாலான் பஹாகியா வெளிவாயிலைக்குப் பிறகு அந்தக் கோர விபத்து நடந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அருகிலிருந்த கால்வாய்க்குள் அசைவற்று கிடந்த 32 வயது ஆடவரை ஏணியைப் பயன்படுத்தி மீட்டனர்.

அவரைச் சோதித்துப் பார்த்ததில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரிந்தது.

புல்வெளியில் நசுங்கிக்கிடந்த கறுப்புநிற கார் பாரந்தூக்கி மூலம் மேலே கொண்டு வரப்பட்டது .

சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.