கொரோனா நோயிலிருந்து குணமடைந்த 41 வயது சீன ஆடவர், வீடு திரும்பி இரண்டு வாரங்களுக்குப் பிறகு உடல்நலச் சிக்கல்களால் உயிரிழந்திருக்கிறார்.
கொவிட்-19 கிருமிப்பரவலால் சிங்கப்பூரில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இதனுடன் 25க்கு அதிகரித்துள்ளது.
சம்பவம் 11, 714 என அடையாளப்படுத்தப்பட்ட அந்நோயாளி, நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து மே 17ஆம் தேதியன்று வீடு திரும்பினார். ஆனால் வியாழக்கிழமையன்று மயங்கி விழுந்த அவர், நுரையீரலில் ரத்தம் உறைந்ததால் மாண்டதாக மரண விசாரணை அதிகாரி உறுதி செய்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

