ஐந்து பள்ளிகளின் நான்கு மாணவர்கள், ஓர் ஊழியருக்குத் தொற்று

ஐந்து வெவ்வேறு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கும் ஓர் ஊழியருக்கும் கொவிட்-19 கிருமி தொற்றியதாக கல்வி அமைச்சு இன்று தெரிவித்தது. அந்த ஐவருக்குமே இலேசான அறிகுறிகள் இருந்ததாக அமைச்சு குறிப்பிட்டது. மீண்டும் அவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அனைவருக்குமே கிருமித்தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இதை வைத்துப் பார்க்கையில் அவர்களுக்கு பள்ளிக்கூடம் ஜூன் மாதம் 2ஆம் தேதி திறக்கப்பட்டதற்கு முன்பாகவே கிருமி தொற்றி இருக்கக்கூடும் என்று தெரியவருவதாக அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.

இவர்கள் முறையே, ஆங்கிலிக்கன் உயர்நிலைப் பள்ளி, சிஹெச்ஐஜே காத்தோங் கான்வென்ட், சிஹெச்ஐஜே செயின்ட் தெரேசா கான்வென்ட், கேலாங் மெத்தடிஸ்ட் உயர்நிலைப் பள்ளி, ஹுவா சோங் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். 12 வயதுக்கும் அதிக வயதுள்ள அனைத்து மாணவர்களையும் முதல் முறையாக மருத்துவரைப் பார்த்த போது சுவாசப் பிரச்சினை இருப்பதாகக் கண்டறியப்பட்ட பள்ளி ஊழியர்கள் அனைவரையும் பரிசோதிக்க ஜூன் 2 முதல் கண்காணிப்புப் பரிசோதனை நடைமுறை தொடங்கியது. அந்த நடைமுறையின் ஒரு பகுதியாக இந்த ஐவருக்கும் கிருமித்தொற்று இருந்தது தெரியவந்தது. ஐவரும் தனித்தனி இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அமைச்சு சுட்டியது.

மொத்தத்தில் பார்க்கையில் பள்ளிக்கூடங்களில் அந்த ஐந்து பேரோடும் தொடர்பில் இருந்த 29 ஊழியர்களும் 100 மாணவர்களும் இப்போது 14 நாள் விடுப்பில் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.அந்த ஐந்து பேருமே பள்ளிகளுக்குச் சென்ற போது பரிசோதிக்கப்பட்டார்கள். அவர்கள் உடலில் காய்ச்சலோ சளிக்காய்ச்சல் போன்ற எந்த அறிகுறியோ தெரியவில்லை.

அவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பவர்கள் கண்டறியப்பட்டு வருகிறார்கள். விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் தனிமை நடவடிக்கை தொடங்கும்போதும் முடியும் போதும் இரு முறை பரிசோதனை நடத்தப்படும்.

பாதிக்கப்பட்ட ஐந்து பள்ளிக்கூடங்கள் உட்பட எல்லா பள்ளிகளுக்கும் உரிய ஏற்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுப்பில் இருக்கக்கூடிய மாணவர்களில் சிலர் தாய்மொழித் தேர்வை ஜூன் 18ஆம் தேதி எழுத பதிந்து இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிய அமைச்சு, இவர்களுக்கான விடுப்பு ஜூன் 17ல் முடிவதால் அந்தத் தேர்வை எழுத முடியும் என்று தெரிவித்து உள்ளது.

இவர்கள் ஆண்டு முடிவில் நடக்கும் தாய்மொழித் தேர்வை எழுத விரும்பினால் அவ்வாறு செய்யலாம்.
பள்ளிக்கூடங்களுக்குத் திரும்பும் மாணவர்களுக்கு உரிய அனைத்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் மிகக் கவனமாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் அமைச்சு செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை அமைச்சு வலியுறுத்தியது.

மாணவருக்கு அல்லது குடும்ப உறுப்பினருக்கு உடல்நிலைச் சரியில்லை என்றால் அந்த மாணவர் பள்ளிக்கூடத்துக்குப் போகக் கூடாது என்று கல்வி அமைச்சு தெரிவித்து உள்ளது. அப்போதைக்கு அப்போது சிலருக்கு கிருமித்தொற்று ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அத்தகைய ஆபத்துள்ளவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதன்மூலம் கிருமிப் பரவல் தடுக்கப்படும் என்றும் அமைச்சு உறுதி தெரிவித்தது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!