கொவிட்-19 எதிர்ப்புப் போரில் களம் இறங்கி உள்ள 'ராஜாக்கள்'

கொவிட்-19 எதிர்ப்புப் போரில் களம் இறங்கி உள்ள 'ராஜாக்கள்'

3 mins read
0a70a501-e96f-4506-9916-b4a69ffe1aa8
'ஹோம்ஸ்டே லாட்ஜ்' என்ற விடுதியில் உள்ள மருத்துவக் கூடத்தில் மருத்துவ ஊழியர்களுடன் ஆலோசிக்கும் ராஜேந்திரன், 24. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான ஹோம்ஸ்டே லாட்ஜ் என்ற விடு­தி­யில் 5,000 ஊழி­யர்­கள் தங்கி இருக்­கி­றார்­கள். அங்கு 500க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்று அதி­கம் பர­வும் இட­மாக வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­களே தொடர்ந்து இருந்து வரு­கின்­றன. கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்தி ஊழி­யர்­க­ளைக் காக்க அர­சாங்­கம் பல­முனை முயற்­சி­களை முழு­மூச்­சாகத் தீவி­ரப்­ப­டுத்தி இருக்­கிறது.

இந்­தச் சூழ­லில், ஹோம்ஸ்டே விடு­தி­யைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளான இரண்டு ராஜாக்­கள் ஆபத்­து­கள் அதி­கம் இருந்­தா­லும் அவற்றை எல்­லாம் துச்­ச­மென ஒதுக்­கி­விட்டு அர­சாங்­கத்­தின் கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் களம் இறங்கி இருக்­கி­றார்­கள்.

அந்த இரண்டு ராஜாக்­களில் ராஜேந்­தி­ரன் ராஜா, 24, என்­ப­வர் நான்­காண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் வேலை பார்த்து வரு­கி­றார். இவரை சக ஊழி­யர்­கள் ராஜா என்று அழைக்­கி­றார்­கள். உடல் முழு­வ­தும் பாது­காப்பு உடை அணிந்து, கையுறை அணிந்து, முகக்­க­வ­சத்­து­டன் வலம் வரும் இவ­ரைப் பார்த்து அர­சாங்­கத்­தின் அதி­வேக ஆத­ரவு குழு­வின் உறுப்­பி­னர் என்று பல­ரும் கரு­து­வதுகூட உண்டு.

தமிழ்­நாட்­டைச் சேர்ந்த ராஜேந்­தி­ரன், வீவக புளோக்­கு­களில் குழாய்ப் பதிப்பு வேலை செய்து வரு­கி­றார். கொவிட்-19 கட்­டுப்­பாடுகள் இரண்டு மாதத்­திற்கு முன் நடப்­புக்கு வந்­த­தி­லி­ருந்து தன் விடு­தி­யில் யாருக்­கா­வது உடல்­நிலை சரி­யில்லை என்­றால் அவர்­களின் விவ­ரங்­களை எல்­லாம் குறித்­துக் கொண்டு பதி­வ­கத்­திற்­கும் பரி­சோ­த­னை­க­ளுக்­கும் அவர்­களை அனுப்பி வைத்து வரு­கி­றார் ராஜேந்­தி­ரன்.

"கொரோனா எதிர்ப்­புப் போரில் நாடே களம் இறங்கி இருக்­கிறது. இந்த நிலை­யில் தேவைப்­ப­டு­வோருக்கு நாம் உதவ வேண்­டும். ஒன்­றா­கச் சேர்ந்து போராட வேண்­டும். வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உதவி செய்­யும் பாக்­கி­யம் எனக்­குக் கிடைத்­தி­ருப்­பது மகிழ்ச்சி அளிக்­கிறது," என்றார் ராஜா.

இவர் செய்­யும் உத­வி­க­ளின் கார­ண­மாக மருத்­துவ ஊழி­யர்­களின் பணி­கள் மிக­வும் சுல­ப­மாக இருக்­கின்­றன. இந்­தப் பணி­யில் வேலு­சாமி முனி­யப்­ப­ராஜ், 34, என்­ப­வ­ரு­டன் சேர்ந்து ராஜேந்­தி­ரன் தொண்­டாற்றி வரு­கி­றார்.

வேலு­சா­மியை விடுதி ஊழி­யர்­கள் ராஜ் என்று அழைக்­கி­றார்­கள். இவர் 2011ல் சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார். அஞ்­சல் மூலம் இந்­தி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சேர்ந்து பிஎச்டி படித்து வரும் ராஜ், பல்­வேறு வழி­களில் சக ஊழி­யர்­களுக்கு உதவி இருக்­கி­றார்.

அர­சாங்­க அறி­விப்­பு­க­ளைச் செவி­ம­டுத்து வாட்ஸ்­அப் மூலம் அவற்றை ஊழி­யர்­க­ளுக்கு அனுப்பி சக­ஊ­ழி­யர்­க­ளுக்­குப் பல விளக்­கங்­க­ளை­யும் அளித்து உதவி வரு­வ­தோடு இவர் கப­சு­ரக் குடி­நீ­ரை­யும் தயா­ரித்து ஊழி­யர்­க­ளுக்கு கொடுத்துவரு­கி­றார்.

கப­சுர நீருக்குக் கிராக்கி கூடி­யி­ருக்­கிறது. கிரு­மித்­தொற்று ஊழி­யர்­க­ளுக்கு நாள்­தோ­றும் இரண்டு தடவை இது கொடுக்­கப்­ப­டு­கிறது.

கப­சுர நீர் கிடைப்­ப­தால் ஊழி­யர்­கள் சாங்கி போன்ற தற்­கா­லிக இடங்­க­ளுக்­குச் செல்ல விரும்­பா­மல் இங்­கேயே தொடர்ந்து தங்­கி­யி­ருக்­கக்­கூட விரும்­பு­கி­றார்­கள் என்று ராஜ் கூறு­கி­றார்.

இந்த இரண்டு பேரும் அரு­மை­யான அர்ப்­ப­ணிப்­புப் பணி­களை ஆற்றி வரு­கி­றார்­கள் என்று அந்த விடு­தி­யில் பணி­யில் அமர்த்­தப்­பட்டு இருக்­கும் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யைச் சேர்ந்த ஸ்டாஃப் சார்­ஜண்ட் சதீஷ்­கு­மார், 33, கூறு­கி­றார்.

$400 கொடுத்த அனில்

இந்த ராஜாக்­கள் அள­வுக்கு உட­லு­ழைப்­புப் பணி­யில் ஈடு­ப­ட­வில்லை என்­றா­லும் இந்­தி­யா­வின் ஹைத­ரா­பாத் நக­ரைச் சேர்ந்த முண்­டலா அனில் குமார் என்ற 31 வயது வாகன ஓட்­டு­நர், தன் தெம்­ப­னிஸ் விடு­தி­யில் தொண்டு செய்­த­தன் மூலம் தான் ஈட்­டிய $400 பணத்தை அப்­ப­டியே கொரோனா எதிர்ப்­புப் போராட்­டத்­திற்கு நன்­கொ­டை­யாகக் கொடுத்­து­விட்­டார்.

இவர் 12 ஆண்டு கால­மாக இங்கு பணி­யாற்றி வரு­கி­றார். இவர் செய்த இந்த நன்­கொ­டையைக் கண்ட நல்ல உள்­ளம் படைத்த ஒரு­வர், அந்­தப் பணத்தை ஹைத­ரா­பாத்­தில் உள்ள குடும்­பத்­தி­ன­ருக்கு அனுப்பி வைக்­கும்­படி அனி­லி­டமே திருப்பிக் கொடுத்­து­விட்­டார். அனில் பெய­ரில் வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யத்­துக்கு அந்­தக் கொடை­யா­ளர் $8,000 நன்­கொடை வழங்க முடிவு செய்­தார்.