குர்பான் சடங்கு நடத்தப்படும் முறையில் சில மாற்றங்கள்

குர்பான் சடங்கு நடத்தப்படும் முறையில் சில மாற்றங்கள்

1 mins read
d2eeccb8-9ad9-40e2-a8bd-1df67da3d4ac
-

கொவிட்-19 நோய்த்தொற்று சூழலில் இவ்வாண்டு ஹஜ்ஜுப் பெருநாளன்று குர்பான் சடங்கு நடத்தப்படும் முறையில் சில மாற்றங்களை சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இவ்வாண்டு சிங்கப்பூருக்கு ஆடுகள் தருவிக்கப்படமாட்டா .

ஆஸ்திரேலியாவில் குர்பான் சடங்கை முஸ்லிம்கள் நடத்துவதற்கு இங்குள்ள பள்ளிவாசல்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று முயிஸ் தெரிவித்தது. அதன் பிறகு குர்பான் ஆட்டிறைச்சி சிங்கப்பூருக்கு வரவழைக்கப்படும். கொவிட்-19 சூழலின் காரணமாக இவ்வாண்டு ஹஜ்ஜுப் பெருநாளன்று குர்பான் சடங்கிற்கு ஏற்பாடு செய்வதில் பல சவால்கள் நிலவுவதாக முயிஸ் கூறியது. அடுத்த இரு மாதங்களில் கொவிட்-19 சூழலில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை அது சுட்டியது.

குர்பான் இறைச்சியின் ஒரு பங்கை சமூகத்தில் உள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கு விநியோகிக்கும் நடைமுறையைப் பள்ளிவாசல்கள் தொடரும் என்று முயிஸ் தெரிவித்தது. குர்பான் சடங்கிற்கு பதிவுசெய்வதற்கான மேல் விவரங்கள் இம்மாத இறுதியில் தெரிவிக்கப்படும்.