வட்டார நிலையில் மேலும் பல கொவிட்-19 பரிசோதனை நிலையங்கள் அமையும் அதிகமானோரை பரிசோதிக்க புதிய ஏற்பாடு

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு உறுதுணையாக சுகாதார மேம்பாட்டு வாரியம் தீவு முழுவதும் வட்டார நிலையில் பரிசோதனை நிலையங்களை படிப்படியாக அமைக்கவுள்ளது. இந்த நிலையங்களில் அதிகமானோருக்கு பரிசோதனைகள் நடத்த முடியும். இந்த விவரங்களை சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று நடைபெற்ற மெய்நிகர் அமைச்சர்நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

கொரோனா கிருமியால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் உட்பட குறிப்பிட்ட குழுக்களிடையே சோதனை நடத்த இந்த நிலையங்கள் அதிகாரிகளுக்கு உதவும் என்று அமைச்சர் கூறினார்.

கிருமித்தொற்றை விரைவாக அடையாளம் காணவும் சமூக பரவலைக் கட்டுப்படுத்தவும் இந்த நிலையங்கள் உதவும். இதுபோன்ற தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட குழுக்களில் முதியோர் இல்லவாசிகள், அங்கு பணிபுரிவோர், பாலர் பள்ளி ஊழியர்கள் ஆகியோர் அடங்குவர்.

மேலும், முதல்முறையாக மருத்துவரைக் காணும்போது கடுமையான சுவாச நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கும் கொவிட்-19 சோதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 65 வயது, அதற்கு மேற்பட்ட வயதுகளில் இருக்கும் முதியவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கல்வி நிறுவனப் பணியாளர்கள், மூத்த மாணவர்கள் போன்ற குழுக்களுக்கு முதலில் சோதனை தொடங்கப்படும் என்றார் திரு கான்.

கொவிட்-19 எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் முன்னிலை ஊழியர்கள் போன்றகொரோனா கிருமித்தொற்று ஏற்பட அதிக அபாயம் உள்ள ஊழியர்களுக்கு சோதனை விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சின் செய்தி அறிக்கை தெரிவித்தது.

சுகாதார மேம்பாட்டு வாரியம் ஏற்கெனவே நான்கு வட்டார சோதனை நிலையங்களை அமைத்துள்ளது. சுகாதாரப் பங்காளிகளுடன் இணைந்து கொவிட்-19 பரிசோதனைக்கு ஆதரவளிக்கும் தேசிய அமைப்பாக சுகாதார மேம்பாட்டு வாரியம் நியமிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

இதில் இரு நிலையங்கள், பழைய போலிஸ் அகாடமி, மரினா பே மிதக்கும் மேடை ஆகிய இடங்களில் ஜூன் 2ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கின. மற்ற இரு நிலையங்கள் புக்கிட் கொம்பாக் விளையாட்டு அரங்கிலும், பீஷான் விளையாட்டு அரங்கிலும் நேற்று அமைக்கப்பட்டன. மற்றொரு நிலையங்கள் எண் 2, பிடோக் நார்த் ஸ்திரீட் 2, முன்னைய செபாக் தக்ரோ விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பாலர் பள்ளி ஊழியர்கள் பரிசோதனை மேற்கொள்வதற்காக இந்த பரிசோதனை நிலையங்கள் மே மாதத்தில் தற்காலிக இடங்களில் அமைக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.

ஜூன் மாதத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட இந்த நிலையங்கள் அடையாளம் காணப்பட்ட துறைகளில் ஊழியர்களுக்கான பரிசோதனைகளை ஆதரிப்பதற்காக அரசாங்க முகவைகளுடன் அணுக்கமாகச் செயல்படுகின்றன.

உதாரணமாக, கட்டுமானத் துறையில் ஊழியர்கள் வேலை தொடங்க அனுமதி பெறுவதற்கு முன்னதாக, கட்டட, கட்டுமான ஆணையம் வட்டார பரிசோதனை நிலையங்களுடன் இணைந்து அவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்கிறது. அதே நேரத்தில் பொருளியல் வளர்ச்சிக் கழகம் கடல்துறை சார்ந்த ஊழியர்களுக்கான சோதனைகளை இந்நிலையங்களுடன் இணைந்து செய்கிறது.

மேலும், தனியார் துறை பங்காளிகளுடன் இணைந்து ஒன் ஃபாரர் ஹோட்டலில் வாகனத்திலிருந்தபடி சளி/எச்சில் மாதிரிகள் சோதனை மேற்கொள்ளும் வசதி போன்ற, பரிசோதனை நிலையங்க ளும் இடம்பெறுகின்றன.

தேவை ஏற்பட்டால் இதுபோன்ற வட்டார பரிசோதனை நிலையங்களை அதிகளவில் சுகாதார மேம்பாட்டு வாரியம் அமைக்கும் என்றும் அமைச்சு கூறியது.

இந்த வட்டார பரிசோதனை நிலையங்களுக்கு மக்கள் தாங்களே நேரில் செல்ல முடியாது. உடல்நிலை சரியில்லாத அல்லது மருத்துவ பிரச்சினை உள்ளவர்கள் தங்கள் பிரதான மருத்துவர்களை அணுக வேண்டும், தேவைப்பட்டால் இந்த நிலையங்களில் அவர்கள் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

முறையான கிருமித்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனிநபர்களையும் சமூகத்தையும் பாதுகாக்க கடுமையான பாதுகாப்பு இடைவெளி இங்கு கடைப்பிடிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!