$1.75 மில்லியன் புத்தாக்க சவால்

$1.75 மில்லியன் புத்தாக்க சவால்

1 mins read
c145a0a9-cb95-4161-ab46-d80543a49db6
புத்தாக்கமிக்க நிதித் தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டறிய $1.75 மில்லியன் மதிப்பிலான அனைத்துலக சவாலை சிங்கப்பூர் நாணய ஆணையம் (எம்ஏஎஸ்) அறிவித்துள்ளது. கோப்புப்படம்: எஸ்டி -

கொவிட்-19, பருவநிலை மாற்றம் என்ற இரு முக்கிய சவால்களை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில், நிதி நிறுவனங்களுக்கு உதவக் கூடிய புத்தாக்கமிக்க நிதித் தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டறிய $1.75 மில்லியன் மதிப்பிலான அனைத்துலக சவாலை சிங்கப்பூர் நாணய ஆணையம் (எம்ஏஎஸ்) அறிவித்துள்ளது. 'எம்ஏஎஸ் நிதித் தொழில்நுட்ப விருதுகள்', 'எம்ஏஎஸ் அனைத்துலக நிதித் தொழில்நுட்ப ஹேக்சலரேட்டர்' என்ற இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும். விருதுகள் பிரிவில்

12 வெற்றியாளர்களுக்கு மொத்தம் $1.2 மில்லியன் பரிசுத்தொகை வழங்கப்படும். 'ஹேக்சலரேட்டர்' பிரிவில் 20 நிறுவனங்களுக்கு தலா $20,000 உதவித்தொகையும் மூன்று நிறுவனங்களுக்கு $50,000 பரிசும் வழங்கப்படும்.