பணிப்பெண்ணை வேலைக்கு சேர்ந்த நாள் முதல் துன்புறுத்திய நிரந்தரவாச தம்பதியர்

பணிப்பெண்ணை வேலைக்கு சேர்ந்த நாள் முதல் துன்புறுத்திய நிரந்தரவாச தம்பதியர்

2 mins read
ddad4b12-8942-479c-a21d-1440fdd61687
குற்றவாளிகள் என நீதிமன்றத் தால் அறிவிக்கப்பட்ட தம்பதியர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்­திய நாட்­டைச் சேர்ந்த அமன்­தீப் கோர் செங்­காங்­கில் உள்ள ஒரு வீட்­டில் பணிப்­பெண்­ணாக வேலை­யைத் தொடங்­கிய நாளி­லேயே அவ­ருக்கு அடி உதை விழுந்­தது. 2016 நவம்­பர் 9ஆம் தேதி ரிவர்­வேல் கிர­சென்ட்­டில் உள்ள வீவக புளோக்­கின் நான்­கா­வது மாடி­யில் உள்ள வீட்­டில் வேலைக்­குச் சேர்ந்த அவர் நவம்­பர், டிசம்­பர் ஆகிய இரு மாதங்­களும் அவ­ரது முத­லாளி தம்­ப­தி­யி­ன­ரால் துன்­பு­றுத்­தப்­பட்­ட­தாக நேற்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அப்­போது 27 வயது ஆன அமன்­தீப்­பின் வேலை­கள் தாங்­கள் எதிர்­பார்த்­த­து­போல இல்லை என்று கரு­திய ஃபர்ஹா டெசீ­னும் அவ­ரது கண­வர் முகம்­மது தஸ்­லீ­மும் அப்­பெண்ணை தாக்­கி­ய­தாக அர­சுத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. அந்த இரு மாதங்­க­ளி­லும் அப்­பெண்ணை ஃபர்ஹா திரும்­பத் திரும்ப அடித்து தாக்­கி­ய­தா­க­வும் இரு வெவ்­வேறு வேளை­களில் தஸ்­லீ­மும் அவரை குத்­தி­ய­தா­க­வும் எட்டி உதைத்­த­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. தாக்­கு­த­லில் ஈடு­பட்ட ஒன்­பது குற்­றச் சம்­ப­வங்­க­ளி­லும் குற்­ற­வி­யல் மிரட்­டல் புரிந்த ஒரு குற்­றத்­தி­லும் ஃபர்ஹா ஈடு­பட்­ட­தாக நீதி­மன்­றம் கண்­ட­றிந்­தது. அவ­ரது கண­வ­ரும் இரு தாக்­கு­தல் சம்­ப­வங்­களில் ஈடு­பட்­ட­தாக அறிந்த நீதி­மன்­றம் தம்­ப­தி­யரை குற்­ற­வா­ளி­கள் என்று அறி­வித்­தது. அவ்­வி­ரு­வ­ரும் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­

வா­சி­கள். இவர்­க­ளுக்­கான தண்­டனை ஆகஸ்ட் 21ஆம் தேதி அறி­விக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"வார நாட்­களில் அதி­காலை 3 மணிக்கு உறங்­கச் செல்­லும் பணிப்­பெண் சுமார் இரண்டு மணி நேரத்­தில் எழுந்­திட வேண்­டும். வார இறுதி நாட்­களில் காலை 7.30 மணிக்கு எழு­வார்," என அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் நீதி­மன்­றத்­தில் விளக்­கி­னார்.

துன்­பு­றுத்­த­லைப் பொறுக்க இய­லாத அமன்­தீப் அந்த வீட்­டி­லி­ருந்து தப்ப முடி­வெ­டுத்­த­தா­க­வும் வீட்டு சாவி இல்­லா­த­தால் வர­வேற்­பறை சன்­னல் வழி­யாக ஏறிக் குதித்து வெளி­யேற முயன்­ற­போது அங்கு சாய வேலை செய்­து­கொண்­டி­ருந்த மணி மனோ­க­ரன் என்­னும் வெளி­நாட்டு ஊழி­யர் அவர் வெளி­யேற உத­வி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.