புதுடெல்லி: கொவிட்-19 நோய்ப் பரவலாலும் தேசிய ஊரடங்காலும் இந்தியாவில் கடந்த மாதத்தில் வேலைக்கு ஆளெடுப்பது 61% குறைந்துவிட்டதாக 'நௌக்ரி.காம்' வேலைவாய்ப்பு இணையத்தளம் தெரிவித்து இருக்கிறது.
ஆக அதிகமாக ஹோட்டல், உணவகங்கள், போக்குவரத்து, விமானப் போக்குவரத்து துறைகள் ஆளெடுப்பதை 91% குறைத்துக்கொண்டன. அதற்கடுத்தபடியாக, சில்லறை விற்பனை (-87%), வாகன தயாரிப்பு மற்றும் துணை நிறுவனங்கள் (-76%), வங்கியியல், நிதிச் சேவைகள் மற்றும் காப்புறுதி (-70%) ஆகிய துறைகளிலும் ஆள்சேர்ப்பு பெரிதும் சரிந்தது.
இந்தியாவில் தொடர்ந்து 3வது மாதமாக ஆள்சேர்ப்பு சரிவைச் சந்தித்து இருக்கிறது.

