கொவிட்-19: பாதுகாப்பு இடைவெளிக்கான மேசைக் காப்புகள்

1 mins read
73e370c1-2208-428d-907c-d738d6735452
முன்னோட்டச் சோதனைக்காக பொருத்தப் பட்டுள்ள மேசைக் காப்புகள், உட்கார்ந்து சாப்பிடுவோருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கின்றனவா என்பது மதிப்பிடப்படும். அத்துடன் மேசைக் காப்புகளைப் பராமரிப்பதும் சுத்தம் செய்வதும் தொடர்பில் 'கோஃபூ' நிறுவனம் மதிப்பீடு செய்யும். படம்: மூவ் மீடியா -

நடப்பில் உள்ள கிருமிப் பரவல் தடுப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் உணவுக் கடைகளில் அமர்ந்து சாப்பிடுவது அனுமதிக்கப்படும். இதற்காக ஒரு மாத கால முன்னோட்டச் சோதனையாக தாம்சன் பிளாசாவில் அமைந்துள்ள 'கோஃபூ' உணவங்காடியில் மேசைக் காப்புகள் பொருத்தப் பட்டுள்ளன.

இந்த முன்னோட்டச் சோதனைக்காக 50 மேசைகளில் பொருத்தப்பட்டுள்ள காப்புகள், உணவு சாப்பிட வருவோரிடையே உள்ள தொடர்பைக் குறைக்க உதவும்.

நீள்சதுர வடிவ மேசைகளுக்கு நடுவே உள்ள காப்பு, எதிரே அமர்பவருடனான தொடர்பைக் குறைக்கும்.

வட்டமான மேசை நடுவே ஒரு கம்பமும் அதனுடன் மூன்று காப்புகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

உணவுக் கடைகளில் அமர்ந்து சாப்பிடுவோர் தங்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது, இருக்கை விட்டு இருக்கையில் அமர்வது, மேசை களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருப்பது, ஒரே மேசையில் ஐந்து பேருக்கு மேல் உட் காராமல் இருப்பது போன்ற பாதுகாப்பு இடைவெளிக்கான நட வடிக்கைகள் நடப்புக்குக் கொண்டு வரப்படவுள்ளன.

இவற்றுடன் இந்த மேசைக் காப்புகளும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

'மூவ் மீடியா' நிறுவனம் இந்த 'அக்ரிலிக்' மேசைக் காப்புகளின் முன்னோட்டச் சோதனைக்கான ஆதரவாளர் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

மேசைக் காப்புத் திட்டத்திற்கான வரவேற்பையொட்டி மற்ற உணவங்காடி நிறுவனங்களுடனும் இணைந்து அவற்றின் உணவு மேசைகளில் காப்புகளைப் பொருத்தத் திட்டம் உள்ளதாக நிறுவனம் கூறியது.