கொவிட்-19 குற்றச்சாட்டுகள்: பாலியல் சேவை வழங்கிய மாது உட்பட ஐவருக்குத் தண்டனை

நடப்பில் உள்ள கிருமி முறியடிப்பு நடவடிக்கைகளை மீறி உடற்பிடிப்பு மற்றும் பாலியல் சேவை வழங்கிய அழகு நிலைய உரிமையாளர் ஜின் யின்னுக்கு நேற்று $22,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததற்காக சிங்கப்பூரரான 55 வயது ஜின்னுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

உரிமம் இல்லாமல் உடற்பிடிப்புச் சேவை வழங்கிய குற்றத்தையும் ஜின் நேற்று ஒப்புக்கொண்டார். நேற்று நீதிமன்றத்தில் மேலும் நான்கு ஆடவர்களுக்கு கொவிட்-19 குற்றச்சாட்டுகள் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டது.


தடியால் அண்டைவீட்டு சன்னலை உடைத்தார்

அண்டைவீட்டிலிருந்து சிகரெட் புகை நாற்றம் வருவதாக எண்ணி தன் குழிப்பந்தாட்ட தடியால் அண்டைவீட்டாரின் சன்னலை உடைத்த 52 வயது யீ சூன் வாவுக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சன்னல் நொறுங்கியதில் ஒரு கண்ணாடித் துண்டு அண்டைவீட்டில் இருந்த பெண்மணியின் கையைக் காயப்படுத்தியதாகக் கூறப்பட்டது.


அதிகாரிகளிடம் தகாத சொற்கள்

சட்டவிரோத முறையில் உணவு வர்த்தகம் இயங்குவதாக புகார் கிடைத்ததை அடுத்து சிங்கப்பூர் உணவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் ஓர் உணவுக்கடைக்குச் சென்றனர்.

அங்கு 43 பெட்டிகள் நிறைய முகக்கவசங்கள் வைத்திருந்த எடி நியோ ஸொங் ஜியெ, 35, அவற்றைத் தான் விற்கவில்லை என்று மறுத்ததுடன் ஓர் அதிகாரியைத் தகாத சொற்களாலும் திட்டியதாக கூறப்பட்டது. நியோவுக்கு $3,000 அபாரதம் விதிக்கப்பட்டது.

பாதுகாப்பு இடைவெளியைக் கண்காணிக்கும் தூதர் ஒருவரையும் தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரி ஒருவரையும் தகாத சொற் களால் திட்டியதுடன் தன் அடையாள அட்டையை மேசை மீது தூக்கி எறிந்த 66 வயது லீ ஆ லூவுக்கும் $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.


நண்பர்களைச் சந்திக்க வீட்டை விட்டு வெளியேறினார்

நண்பர்களைச் சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய 63 வயது ஓங் கிங் ஹுவாவுக்கு நேற்று $3,500 அபராதம் விதிக்கப்பட்டது. ஓங் தன் வாம்போ டிரைவ் வீட்டை விட்டு வெளியேறி நண்பரைச் சந்தித்ததாகவும் போலிஸ் அதிகாரி ஓங்குக்கு $1,000 அபராதம் விதித்ததாகவும் கூறப்பட்டது. ஐந்து நாட்கள் கழித்து ஓங் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி வேறு இரு நண்பர்களைச் சந்தித்தார்.

முகக்கவசம் அணியாத மூவரையும் எச்சரித்த மூன்று போலிஸ் அதிகாரிகள் அவ்விடத்தை விட்டு போகுமாறு கூறினர். ஆனால் ஓங் போக மறுத்ததுடன் தன் அடையாள அட்டையைக் காட்டி தனக்கு ஆணை பிறப்பிக்க சவால் விட்டதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!