கிருமி முறியடிப்பு திட்டம் நடப்பில் இருந்தபோது குற்றம் புரிந்தனர்

கிருமி முறியடிப்பு திட்டம் நடப்பில் இருந்தபோது குற்றம் புரிந்தனர்

1 mins read
55884d5a-7101-424c-b98a-32f03718f640
-

கிருமி முறியடிப்பு திட்டம் நடப்பில் இருந்த காலகட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக நேற்று நீதிமன்றத்தில் மூவர் முன்னிலையாகினர். இவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெவ்வேறு குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

வாகனங்களிலிருந்து பண அட்டைகள் மற்றும் 'ஈசிலிங்க்' அட்டைகளைத் திருடியதாக டான் ஹோக் சீ, 42, மீது மோசடி குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

கடன்முதலை சார்பில் இரு வீடுகளுக்குச் சென்று தொல்லை கொடுத்ததன் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆண்ட்ரூ லீ யோங் டெக், 31, மீது சுமத்தப்பட்டுள்ளன. இரு வீடுகளையும் மிதிவண்டிக்கான பூட்டால் ஆண்ட்ரூ பூட்டியதாகக் கூறப்படுகிறது.

ஒரு சீனக் கோவிலுக்குள் புகுந்து ஒன்பது சிலைகளைக் கொள்ளையடித்தது, பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறி இன்னொரு நபரைச் சந்தித்தது ஆகியவற்றின் தொடர்பில் ருத்ரா கவில் பூபாலசிங்கம், 38, மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இம்மூவருடன் வீட்டில் இருக்கும் உத்தரவை மீறியதன் தொடர்பில் ராமேஸ்வரி தேவி ஜெய்ராஜ் சிங், 34, மீதும் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. தனக்குத் தரப்பட்ட ஹோட்டல் அறையை விட்டு வெளியேறி ஐந்து இடங்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.