நடைமுறை செயல்பாடுகளில் எதிர்கொள்ளக்கூடிய இடர்களைச் சமாளிப்பது தொடர்பான படிப்பு, ஓசிபிசி வங்கி அறிமுகப்படுத்த இருந்த முதலீட்டுத் திட்டங்களில் காணப்பட்ட இடர்ப்பாடுகளைக் கண்டறிய குமாரி குஞ்சம்மை சொக்கலிங்கத்திற்கு உதவியது.
அந்தப் படிப்பு, "மின்னிலக்க தீர்வுகளில் ஏற்படக்கூடிய இடர்ப் பாடுகளை சிறப்பாக கையாள உதவியாக, நாங்கள் தெரிந்துகொள்ள விரும்பிய பல்வேறு சிக்கல்களுக்கு எங்களை அறிமுகப்படுத்தியது," என்று வங்கியின் முதலீட்டு நடவடிக்கைகளுக்கான துணைத் தலைவர் குமாரி குஞ்சம்மை கூறினார்.
கொவிட்-19 நோய்ப் பரவலின்போது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த வங்கிகளை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் பயிற்சி மானியம் மூலம் பயனடைந்த கிட்டத்தட்ட 5,000 பயனாளிகளில் இவரும் ஒருவர்.
'இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ்' என்ற அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு கட்டணம் செலுத்த, ஆணையம் ஒரு மணி நேர பயிற்சிக்கு $10 வழங்கும். நிதி நிறுவனங்கள், ஃபிண்டெக் நிறுவனங்கள் நிதியுதவி வழங்கும் ஊழியர்களுக்கு ஒரு மணி நேர பயிற்சிக்கு $15 என்ற அடிப்படையில் நிதியளிக்கும்.
"கொவிட்-19 நோய்ப் பரவலின்போது, புதிய இயல்புக்கு ஏற்ப நாங்கள் பணிபுரியும் முறையை மாற்ற வேண்டியிருந்தது. மாறுபட்ட வேலை நேரங்கள், வீட்டிலிருந்து பணிபுரியும் ஏற்பாடுகள் போன்றவற்றால் வேலையில் ஏற்பட்ட மாற்றங்களை சமாளிப்பதுடன், குடும்பத்தினருக்கும் எனது தனிப்பட்ட கற்றல் வளர்ச்சிக்கும் எனது நேரத்தைத் திட்டமிட வேண்டியிருந்தது," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார் குமாரி குஞ்சம்மை.
"எனது பணியில், கொவிட்-19 நிலைமைச் சமாளிப்பது என்பது மாற்றங்களை ஏற்று, செயல்படுத்துவதுதான். இதனால் புதியவகையான இடர்ப்பாடுகள் அதிகரிக்கலாம்.
"இந்த பாடத்திட்டத்தின் மூலம், எனது பணிக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப அறிவை மட்டுமல்ல, கொவிட் -19 போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் சுறுசுறுப்பாகவும் மாற்றங்களுக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டு செயல்படுவதற்
கான முன்னோக்கு சிந்தனையை
யும் நான் பெற்றேன்," என்றார் அவர்.

