சிங்கப்பூர் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி, தனது ஊடகத்துறை, கலைகள், வடிவமைப்புத் துறைகளுக்கான பட்டயக் கல்வியை எட்டு பாடத் திட்டங்களை உள்ளடக்கிய ஒன்றாக வடிவமைத்துள்ளது.
இதன்மூலம் ஊடகத்துறை, கலைத்துறை, வடிவமைப்புத்துறை உள்ளிட்ட துறைகளை எடுத்துப் பயில்பவர்களுக்கு அத்துறைகள் சார்ந்த கல்வி, பயிற்சிகள் வழங்கப்படும்.
இதன் மூலம் மாணவர்கள் பல துறைகளையும் அறிந்து பன்முகத் திறனாளராக விளங்குவர்.
இந்தக் கல்வியை முடித்தவர்களுக்கு ஊடகம், கலைகள், வடிவமைப்புத் துறையில் பயின்றதற்கான பட்டயம் வழங்கப்படும்.
எட்டுப் பாடங்கள்: 'அனிமேஷன் அண்ட் கேம் ஆர்ட்'; 'அப்ளைட் டிராமா அண்ட் சைக்காலஜி'; 'டிசைன் ஃபார் கம்யூனிகேஷன் அண்ட் எக்ஸ்பீரியன்ஸ்'; 'கேம் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட்'; 'இன்டகிரேடெட் மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன்ஸ்'; 'மோஷன் டிசைன் அண்ட் எஃபெக்ட்ஸ்'; 'மியூசிக் புரொடக்ஷன்'; 'ஸ்டோரி அண்ட் கன்டெண்ட் கிரியேஷன்ஸ்' ஆகியவையாகும்.
முதல் ஆறு மாதத்திற்குப் பின் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்தைச் சிறப்புப் பாடமாகத் தேர்வு செய்யலாம் அல்லது இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டில்கூட தங்களின் விருப்பப்பாடத்தைத் தேர்வுசெய்து படிக்கலாம். முன்னதாக இந்தப் பாடங்கள் யாவும் தனித்தனிப் பட்டயப் பாடங்களின்கீழ் கற்றுத்தரப்பட்டன.
இந்தத்துறையில் பட்டயம் பெறும் மாணவர்கள் 'அனிமேட்டர்ஸ்', 'டிசைனர்ஸ்', 'கேம் டெவலப்பர்ஸ்', 'மோஷன் கிராஃபிக்ஸ் ஆர்ட்டிஸ்ட்' மற்றும் 'மியூசிக் புரொடியூஷர்' உள்ளிட்ட வேலைகளில் சேர வாய்ப்புகள் உள்ளன.

