உணவக ஊழியர் மேல் எச்சில் உமிழ்ந்த மாது மீது குற்றச்சாட்டு

உணவக ஊழியர் மேல் எச்சில் உமிழ்ந்த மாது மீது குற்றச்சாட்டு

1 mins read
59e0dbff-04de-4598-9b04-43c14b5741b1
முகக்கவசத்தை அகற்றிவிட்டு, ஓர் உணவக ஊழியரை நோக்கி எச்சில் உமிழ்ந்ததாக கூறப்படும் லின் சி டிங் (படம்), 42. படம்: எஸ்டி -

அணிந்திருந்த முகக்கவசத்தை அகற்றிவிட்டு, ஓர் உணவக ஊழியரை நோக்கி எச்சில் உமிழ்ந்ததாக கூறப்படும் லின் சி டிங் (படம்), 42, மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது. சென்ற மாதம் 22ஆம் தேதியன்று நெக்ஸ் கடைத்தொகுதியில் உள்ள 'கேஎஃப்சி' விரைவு உணவகத்தில் பணிபுரியும் பெனிகா எனலாவ் கோமெஸ், லின்னிடம் உணவுக்காக காத்திருக்கச் சொன்னதை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. குமாரி கோமெஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரின் இறப்புக்குத் தான் காத்திருப்பதாக லின் கத்தினார் என்று கூறப்படுகிறது. தன் முகக் கவசத்தைக் கீழே இறக்கிவிட்டு குமாரி கோமெஸ் மீது லின் எச்சில் உமிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வந்தன. இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு நாட்களில் லின் கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு இடைவெளிக்கான நடவடிக்கைகளை மீறியது உட்பட லின் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. லின்னின் வழக்கு விசாரணை ஜூலை 1க்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.