போலி இணையத்தளங்கள்: சிங்கப்பூர் பூல்ஸ் எச்சரிக்கை

போலி இணையத்தளங்கள்: சிங்கப்பூர் பூல்ஸ் எச்சரிக்கை

1 mins read
442065e9-8790-4b33-b6c6-3d62ddfc5677
-

சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம், தன்னுடைய இணையத்தளம் போல் செயல்படும் போலி தளங்கள் பற்றி எச்சரித்துள்ளது, பந்தயம் கட்டுவோரின் ரகசிய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் அத்தகைய போலி தளங்கள் செயல்படுவதாக அது எச்சரித்து உள்ளது. அந்த நிறுவனம், தன் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க இணையத்தில் போலி தளங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அதோடு, தன் அடையாளத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தும் போலியான செயலிகள் மீதும் சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் கண்வைத்து வருகிறது. இந்த நிறுவனம், கடந்த ஓராண்டில் இத்தகைய சுமார் 50 தளங்களைக் கண்டுபிடித்து இருக்கிறது. அதைத் தொடர்ந்து அவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.