சிங்கப்பூரர்களை மலேசியா அனுமதிக்காது என்று தாம் கூறியதாகப் பரவும் தகவல் பொய் என்று மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் கூறி உள்ளார். மேலும் சமூக ஊடகத்தில் இந்த வதந்தியைப் பரப்பி விட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலிசில் தாம் புகார் அளித்திருப்பதாகவும் அவர் நேற்று தெரிவித்தார்.
"மலேசியாவின் எல்லைப் பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டு, சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட எந்த நாட்டினரும் மலேசியாவுக்குள் வர இயலாத நிலையில் இதுபோன்ற தீய செய்திகளை நம்ப வேண்டாம்.
"இச்செயல் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு போலிசிடமும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடமும் புகார் அளித்திருக்கிறேன் என இஸ்மாயில் சாப்ரி தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். பயணக் கட்டுப்பாடு களைத் தளர்த்த சிங்கப்பூரும் மலே சியாவும் பேச்சு நடத்தி வருகின்றன.

