வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர்கள் அநேகமாக உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் ஐந்து உறுப்பினர் கொண்ட வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் வேட்பாளர்கள் யாவர் என்பது அநேகமாக உறுதியாகி விட்டது.

கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக், ஒருவரைத் தவிர மற்ற நால்வரின் பெயர்களை உறுதி செய்துவிட்டதாக அறியப்படுகிறது. டாக்டர் டானுடன் கட்சியின் உதவித் தலைவர் ஹேசல் புவா, உறுப்பினர்கள் திரு நடராஜா லோகநாதன், திரு ஜெஃப்ரி கூ ஆகியோரே அந்த ஐவரில் நால்வர்.

அந்தக் குழுவில் இடம்பெறும் இறுதி நபராக, கட்சியின் உதவித் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் அல்லது கட்சி உறுப்பினரான அபாஸ் கஸ்மானி தேர்ந்தெடுக்கப்படக்கூடும்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி வேட்பாளர் குழுவில் இடம்பெறுவது பற்றி திரு லியோங்கிடம் கேட்கப்பட்டதற்கு, தாம் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி வேட்பாளர் குழுவுக்குத் தலைமை தாங்க முதலில் பரிசீலிக்கப்பட்டது என்றும் அதன் தொடர்பில் இதர எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் 29 இடங்களில் போட்டியிட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி முடிவெடுத்துள்ளது. முதலில் அது 44 இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தது.

பைனியர் தனித்தொகுதியில் போட்டியிட செயல்முறை ஆலோசகராகப் பணியாற்றும் திரு லு கூ ஹோங் தேர்ந்தெடுக்கப்படக்கூடும்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் ராஜா முன்பு தனித்தொகுதியாகச் செயல்பட்டபோது டாக்டர் டான், மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1980 முதல் 2006 வரை 26 ஆண்டுகளாகச் செயல்பட்டார். ஆயர் ராஜா, வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதிக்குள் 2006ல் இணைந்துக்கொள்ளப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!