முக்கிய சேவைகளுக்கு கூடுதல் கட்டணம்: பலர் சம்மதம்

முக்கிய சேவைகளுக்கு கூடுதல் கட்டணம்: பலர் சம்மதம்

1 mins read
4c4083cb-c89e-4a23-8c0c-f5d5db3486e2
கோப்புப்படம்: எஸ்டி -

துப்புரவுப் பணிகள், பாதுகாப்புப் பணிகள் போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்த பத்தில் எட்டு சிங்கப்பூரர்கள் இணங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியச் சேவைகளுக்குக் கூடுதலாக 10 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடு வரை கட்டணம் செலுத்துவதில் பிரச்சினை ஏதும் இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பாளர்களுக்கான சேவை, பராமரிப்பு கட்டணம், தனியார் வீடுகளின் உரிமையாளர்களுக்கான பராமரிப்புக் கட்டணம் ஆகியவை இந்த அத்தியாவசியச் சேவையில் அடங்கும்.

வழக்கமாக சேவை, பராமரிப்புக் கட்டணத்துக்காக சிங்கப்பூரர்கள் மாதத்துக்கு $20லிருந்து $90 வரை செலுத்துகின்றனர். எனவே, கட்டணம் 20 விழுக்காடு உயர்த்தப்பட்டால் மாதத்துக்குக் கூடுதலாக $18 செலுத்தவேண்டிவரும்.