பதவி விலகிய பொதுச் சேவை அதிகாரிகள் மூவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்ப்பு

தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாகி டான் கியட் ஹாவ் இம்மாதம் 20ஆம் தேதியன்று தமது பதவியிலிருந்து விலகுகிறார்.

அண்மையில் தங்கள் பதவிகளி லிருந்து விலகும் மூத்த பொதுச் சேவை அதிகாரிகள் பட்டியலில் திரு டானும் சேர்ந்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் (மசெக) வேட்பாளராக அவர் களம் இறக்கப்படக்கூடும் என்று கட்சி தகவல்கள் கூறுகின்றன.

கடந்த பொதுத் தேர்தலின்போது அக்குழுத் தொகுதியில் ஆளும் மசெகவுக்குக் கடும் போட்டியைக் கொடுத்தது பாட்டாளிக் கட்சி. அக்குழுத் தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் திரு லிம் சுவீ சே, திரு லீ யி ஷியான் இருவரும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் குடியிருப்பாளர்களுடனான மெய்நிகர் சந்திப்புக் கூட்டங்களில் திரு டான் பங்கேற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி விலகியுள்ள இதர பொதுச் சேவை அதிகாரிகளில் சுகாதார அமைச்சின் மூத்தோர் தலைமுறை அலுவலகத்தின் முன்னாள் குழுமத் தலைமை நிர்வாகி திரு யிப் ஹோன் வெங்கும் சுகாதார அமைச்சின் சுகாதாரப் பராமரிப்பு உருமாற்ற அலுவகத்தில் உள்ள சமூக ஈடுபாட்டுப் பிரிவின் தலைவர் திருவாட்டி இங் லிங் லிங்கும் அடங்குவர்.

திரு யிப் சுகாதார அமைச்சிலிருந்து விலகிவிட்டார். திருவாட்டி இங், தாம் முன்பு பணியாற்றிய அமைச்சில் உள்ள ஒரு பிரிவின் மூத்த ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ளார். மற்றொரு முன்னாள் பொதுச் சேவை அதிகாரியான திரு டெஸ்மண்ட் டான், மக்கள் கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் விலகினார்.

திருவாட்டி இங், அங் மோ கியோ குழுத் தொகுதிக்கு உட்பட்ட ஜாலான் காயூ நாடாளுமன்ற உறுப்பினர் இந்தான் அஸுரா மொக்தாருடன் இணையம் வழி நடத்தப்பட்ட மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கடந்த வியாழக்கிழமை சேர்ந்து கொண்டார்.

திரு யிப், வர்த்த தொழில் மூத்த துணை அமைச்சர் கோ போ கூனுடன் மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டுள்ளார். தொகுதி எல்லை மாற்றங்களுக்குப் பிறகு அடுத்த பொதுத் தேர்தலில் டாக்டர் கோவின் பொறுப்பில் உள்ள இயோ சூ காங் தனித் தொகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

திரு டெஸ்மண்ட் டான், பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதிக்குத் தலைமை தாங்கும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனுடன் பல்வேறு அடித்தள அமைப்புகளின் விவகாரங்களில் பங்கேற்றுள்ளார்.

தமது பொறுப்பிலிருந்து விலகும் திரு டான் கியட் ஹாவின் சேவையைப் பாராட்டிய தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியல் திட்டங்களுக்கு திரு டான் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளார் என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!