சீர்திருத்தக் கட்சியின் முதல் பிரிவு வேட்பாளர்கள் அறிமுகம்

1 mins read
139b4897-4317-4550-b6e3-5ecbaf838ee2
சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியின் முதல் பிரிவு வேட்பாளர்கள் (மேல் இடமிருந்து) ருராய்னி யூனோஸ், டேரன் சோ, குர்தேவ் சிங், மஹாபூப் பாட்சா, சார்ல்ஸ் இயோ, கட்சித் தலைவர் எண்டி ஸு. படங்கள்: சீர்்திருத்தக் கட்சி -

எதிர்த்தரப்பு சீர்திருத்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு கென்னத் ஜெயரத்னம் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் பிரிவு வேட்பாளர் அறுவரை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தினார்.

முன்னைய 2011, 2015 பொதுத் தேர்தல்களில் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிட்ட தமது கட்சி இம்முறையும் அங்கு போட்டியிடும் என்று அவர் தெரிவித்தார். அப்படி என்றால், அங்கு மக்கள் செயல் கட்சி (மசெக), சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, சீர்திருத்தக் கட்சி ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நடைபெறக்கூடும்.

அத்துடன் அங் மோ கியோ குழுத் தொகுதி, ராடின் மாஸ் தனித்தொகுதி, இயோ சூ காங் தனித்தொகுதி ஆகியவற்றிலும் அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தும் என்று தெரிவித்தது.

கடந்த பொதுத் தேர்தலில் சீர்திருத்தக் கட்சி வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் 21.4% வாக்கு களைப் பெற்றது. மசெக 78.6% வாக்குகளைப் பெற்று வென்றது.