கணினி, கைபேசி ஊடுருவல் மென்பொருள் பதிவிறக்கம் அதிகரிப்பு; மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை

கணினி, கைபேசி ஊடுருவல் மென்பொருள் பதிவிறக்கம் அதிகரிப்பு; மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை

1 mins read
aa40b227-a2ff-4331-9090-febc72f3cb4a
படம்: டிஎன்பி -

கணினி, கைபேசி ஊடுருவல் மென்பொருள் பதிவிறக்கம் சிங்கப்பூரில் அதிகரித்திருப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆசிய பசிபிக் நாடு

களைக் காட்டிலும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் ஊடுருவல் மென்பொருள் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

கணினி, கைபேசி ஆகியவற்றைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே இந்த ஊடுருவல் மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்படுகிறது.

இணையப்பக்கத்துக்கு ஒருவர் செல்லும்போது அல்லது இணையம் மூலம் படிவங்களை நிரப்பும்போது அவருக்கே தெரியாமல் இத்தகைய மென்பொருள்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இத்தகைய நிகழ்வுகள் 138.5 விழுக்காடு அதிகரித்துள்ளன. ஊடுருவல் மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்டதும் அதன் மூலம் கணினி அல்லது கைபேசியில் பதிவு செய்யப்படும் மறைச்சொற்கள், நிதி தொடர்பான தகவல்கள் திருடப்படுகின்றன.

தீங்கு விளைவிக்கும் மென்பொருள்களை எதிர்க்கும் மென்பொருளைப் பயன்படுத்துவது, கணினி மற்றும் கைபேசியின் மென்பொருளை மேம்படுத்துவது போன்ற உத்திகளைக் கையாண்டு இத்தகைய ஊடுருவல்களைத் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கள் கணினி, கைபேசி ஆகியவற்றிலிருந்து தேவையில்லாத மென்பொருள்களை நீக்குவது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.