இரண்டாம் கட்டத் தளர்வில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடைமுறைகளுடன் வர்த்தகச் செயல்பாடுகள்

1) இரண்டாம் கட்டத்தில் செயல்படத் தொடங்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை உறுதிசெய்ய வேண்டுமா?

வீட்டிலிருந்து பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அவ்வாறே தொடர வேண்டும். அதற்கு தேவையான வசதிகளை முதலாளிகள் தொடர்ந்து வழங்க வேண்டும். இது பணியிடத்தில் நேரடித் தொடர்புகளை குறைக்கவும், கொவிட்-19 கிருமி பரவுவதைக் குறைக்கவும் உதவும்.

ஊழியர்கள் வீட்டிலிருந்து குறிப்பிட்ட வேலையைச் செய்ய முடியாது அல்லது வேலையிடத்துக்குச் செல்ல வேண்டியது அவசியம் எனும் நிலையில் ஊழியர்கள் அலுவலகம் செல்ல முதலாளிகள் அனுமதிக்கலாம். (எடுத்துக்காட்டாக, வீட்டிலிருந்து பயன்படுத்த முடியாத கணினி இயக்கங்களையும் சாதனங்களையும் பயன்படுத்த). தொலைத்தொடர்பு வசதிகளைப் பயன்படுத்துவது போன்றவை மூலம் நேரடிக் கூட்டங்கள் குறைக்கப்பட வேண்டும்.

பணியிடத்தில் வேலை செய்ய வேண்டிய ஊழியர்கள் (எடுத்துக்காட்டாக, சமைத்தல் அல்லது உணவு, பான கடைகளில் சேவை வழங்குதல்) பணியிடத்திற்கு திரும்பலாம். எனினும், எப்போதும் முகக்கவசம் அணிவது போன்ற கடுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அமலில் இருப்பது கட்டாயம்.

2) இரண்டாம் கட்டத்தில் எனது நிறுவனம் மீண்டும் இயங்கலாமா என்பதை எப்படி அறிவது?

ஜூன் 19ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்பட்ட வர்த்தகங்களின் பட்டியலை https://covid.gobusiness.gov.sg/permittedlist/ என்ற இணையத்தளத்தில் காணலாம். பட்டியலில் உள்ள வர்த்தகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்குவதற்கு முன் விலக்கு பெற வர்த்தக, தொழில் அமைச்சுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை. https://covid.gobusiness.gov.sg என்ற இணையத் தளத்தில் வேலையிடத்தில் பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கையை செயல்பாடுகளைத் தொடங்கிய இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

3) இரண்டாம் கட்டத்தில் எத்தகைய உணவு, பான விற்பனை நிலையங்கள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன?

2020 ஜூன் 19ஆம் தேதியன்று இரண்டாம் கட்டத் தளர்வு நடப்புக்கு வரும்போது, ​​பானங்களை பிரதானமாக விற்கும் பிரத்யேக கடைகள் உட்பட அனைத்து உணவு, பான நிறுவனங்களும் உணவருந்தும் சேவைகளை வழங்க அனுமதிக்கப்படுகின்றன (மதுக் கூடங்கள், இரவு கேளிக்கை விடுதிகள், டிஸ்கோ பிரிவின் கீழ் எஸ்எஃப்ஏ உணவு கடை உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் தவிர). நேரடி இசை, வானொலி ஒலிபரப்பு, தொலைக்காட்சி/காணொளி காட்சிகளும்; பிற பொது பொழுதுபோக்குகளான நடனம், ‘டார்ட்ஸ்’ எனப்படும் குறி பார்த்து எறிதல் அல்லது கரவோக்கே போன்றவையும் அனுமதிக்கப்படாது.

அனைத்து உணவு, பான நிறுவனங்களிலும் தினமும் இரவு 10.30 மணிக்குப் பிறகு மது விற்பனையும் அருந்துதலும் தடைசெய்யப்படும்.

4) நான் உணவு, பான வணிக உரிமையாளர். பாதுகாப்பை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை?

அனைத்து உணவு, பான விற்பனை நிலையங்களும் www.covid.gobusiness.gov.sg என்ற இணையத் தளத்தில், “Safe Management Requirements” எனும் பிரிவிலும்; சிங்கப்பூர் என்டர்பிரைசிலும் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.

அனைத்து ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், விநியோக பணியாளர்கள், வேலையிடத்தில் இருக்கும் ஏனைய அனைவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்வது போன்றவை சில முக்கிய விதிமுறைகளாகும்.

பொதுவான இடங்கள், பொருட்கள், அதிகமாக தொடப்படும் மேற்பரப்புகள் (எ.கா. முகப்பு, உணவு பட்டியல்), தொடர்பு சாதனங்கள் (எ.கா. ஐபேட்கள், விவேக கூடங்கள்) போன்றவை அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படுவதையும் உணவு, பான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு குழு அல்லது மேசையில் ஐந்து அல்லது அதற்கும் குறைவானவர்களே இருப்பதையும், மேசைகள் அல்லது குழுக்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி இருப்பதையும் உணவு, பான நிறுவனங்கள் விற்பனை நிலையங்கள் உறுதிப்படுத்த வேண்டும். வரிசைகள் தெளிவாகக் குறிக்கப்பட வேண்டும். நுழைவாயில்கள், பணம் செலுத்துமிடம் போன்ற பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியை உறுதிசெய்ய வேண்டும் (எ.கா. தரைக் குறியீடுகள் மூலம்). பாதுகாப்பான இடைவெளி குறித்து வாடிக்கை யாளர்களுக்கு தெளிவான புரிதலை வழங்க சேவைப் பணியாளர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

5) உணவகங்களில் ‘புஃபே’ விருந்துக்கு அனுமதி உண்டா?

இல்லை. சுய சேவை ‘புஃபே’களை ரத்து செய்ய வேண்டும். ‘புஃபே’ கேட்டரிங் சேவைக்கும் அனுமதி இல்லை.

6) கடைத்தொகுதி ஒன்றிலுள்ள ஓர் உணவகத்திற்கு

நான் உரிமையாளர். ‘சேஃப் என்ட்ரி’ முறையை செயல்படுத்துவது, உடல் வெப்பநிலை பரிசோதனை போன்றவற்றை நான் அமல்படுத்தவேண்டுமா? ஏற்கெனவே கடைத்தொகுதிக்குள் நுழைவோருக்கு இவை செய்யப்படுகின்றன.

தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் தேவை ஏற்படும்போது கொடுப்பதற்காக வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரிக்க, அமர்ந்து சாப்பிடும் வசதியை வழங்கும் அனைத்து உணவகங்களும் ‘சேஃப் என்ட்ரி’ முறையை செயல்படுத்துவது கட்டாயம். உணவை வாங்கிச் செல்வது அல்லது விநியோகத்திற்கு மட்டுமே சேவை வழங்கும் உணவகங்கள், தொடர்பு குறைவாக இருப்பதால் ‘சேஃப் என்ட்ரி’ முறையைச் செயல்படுத்தத் தேவையில்லை.

அமர்ந்து சாப்பிடும் சேவையை வழங்கும் அனைத்து உணவு, பான நிறுவனங்களும், வாடிக்கை யாளர்களின் உடல் வெப்பநிலையையும் வெளிப்படையாகத் தெரியக்கூடிய அறிகுறிகளையும் பரிசோதிக்க வேண்டும். ஏற்கெனவே இவை நடப்பிலுள்ள கடைத்தொகுதியில் இயங்கும் உணவகங்கள் இதற்கு விதிவிலக்கு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!