தேர்தலில் போட்டியிடும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் முதல் ஆறு வேட்பாளர்கள்

தேர்தலில் போட்டியிடும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் முதல் ஆறு வேட்பாளர்கள்

1 mins read
9b0a9086-b232-4356-9429-b919b385271e
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆறு வேட்பாளர்களான (மேல், இடமிருந்து) திரு பிரான்சிஸ் யுவென் கின் பெங், திரு ஸ்ரீ நல்லக்கருப்பன், திரு பிராட்லி போயர், திருவாட்டி ஹேஸல் புவா, திரு முகம்மது தவ்ஃபிக் சுப்பான், திருவாட்டி கிஜென் வோங். படம்: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி -

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி யின் சார்பாக அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் தனது முதல் ஆறு வேட்பாளர்களை நேற்று அறிமுகப்படுத்தினார் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக். அவர்களில் ஐவர் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடுகின்றனர்.

ஸூம் மெய்நிகர் கூட்டம் வழி பேசிய 80 வயது டாக்டர் டான், "வேட்பாளர்கள் அனைவரும் பல்வேறு வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்டவர்கள். அவர்களில் சிலர் வழக்கமான கல்விப் பாதையில் செல்லாமல், சற்று அதிக காலம் எடுத்து கல்வித் தகுதி பெற்றவர்கள்," என்றார்.

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் முன்னாள் கர்னலான 70 வயது திரு பிரான்சிஸ் யுவென் கின் பெங், முதலீட்டு நிபுணரான 56 வயது திரு ஸ்ரீ நல்லக்கருப்பன், ஊடக ஆலோசகரான 53 வயது திரு பிராட்லி போயர், சீனாவில் கடந்த 20 ஆண்டுகளாக கல்ஃப் ஆயில் சைனா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான 54 வயது திருவாட்டி கிஜென் வோங், தகவல் தொழில்நுட்ப மேலாளரான 40 வயது திரு முகம்மது தவ்ஃபிக் சுப்பான், கல்வி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் கட்சியின் உதவித் தலைவருமான திருவாட்டி ஹேஸல் புவா.

திருவாட்டி புவா, வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் டானின் தலைமையிலான கட்சி வேட்பாளர் குழுவில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.