தேர்தலில் போட்டியிட ரெட் டோட் யுனைடெட் தயார்

தேர்தலில் போட்டியிட ரெட் டோட் யுனைடெட் தயார்

1 mins read
ee33ec4c-5c42-4fe4-8a1d-3159097c10ef
படம்: கோப்புப்படம், எஸ்டி -

புதிய அரசியல் கட்சி ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான திரு ரவி பில மோன் (படம்) ரெட் டோட் யுனைடெட் எனும் கட்சியை நிறுவியுள்ளார். ரெட் டோட் யுனைடெட்டின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதை அடுத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் 12 எதிர்க்கட்சிகள் போட்டியிடக்கூடும்.

கட்சி தொடங்கி இன்னும் ஒரு மாதம்கூட ஆகாத நிலையிலும் தேர்த லில் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்த தான் தயாராக இருப்பதாக ரெட் டோட் யுனைடெட் கூறியது. ரெட் டோட் யுனைடெட் கட்சி இம்மாதம் 15ஆம் தேதியன்று பதிவு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது. ரெட் டோட் யுனைடெட் கட்சி சமர்ப்பித்த விண்ணப்பம் வேகமாக பரிசீலனை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டதா என்பது குறித்து ரவி தெரிவிக்கவில்லை. ரெட் டோட் யுனைடெட் கட்சி பதிவு விண்ணப்பத்தை கடந்த மாதம் 26ஆம் தேதியன்று சமர்ப்பித்து, மூன்று வாரங்களில் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.