கழிவுநீர் சோதனையில் கொவிட்-19 கிருமியைக் கண்டுபிடிக்கலாம்

கழிவுநீர் சோதனையில் கொவிட்-19 கிருமியைக் கண்டுபிடிக்கலாம்

1 mins read
3874d1d0-e634-4db2-9ea8-5336bdf9c5d0
சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இரு­வர் நேற்­றுக் காலை மர­ண­ம் அடைந்­த­னர். கொரோனா தொற்­றால் சிங்­கப்­பூ­ரில் முதன்முதலில் பதி­வான மர­ணங்­கள் இவை­தான். படம்: எஸ், டெஸ்மண்ட் ஃபூ -

பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட சோதனைத் திட்டம் ஒன்றில் கொரோனா கிருமித்தொற்றின் அளவை கழிவுநீர் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

வாரியம் தலைமை தாங்கும் ஒரு குழு தற்போது 20 பெரிய ஊழியர் தங்கும் விடுதிகளில் உள்ள கழிவுநீரை சோதித்து வருகிறது.

ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்றை ஒழித்து, அவற்றில் தங்கியுள்ள ஊழியர்களைப் படிப்படியாக வேலைக்குத் திரும்ப அனுமதிக்கும் அரசாங்க முயற்சியின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

சில ஊழியர் தங்கும் விடுதிகளிலிருந்து பெறப்பட்ட கழிவுநீர் மாதிரிகளில் கிருமியின் அறிகுறி தென்பட்டதால், அங்குள்ள ஊழியர்களிடையே 'சுவாப்' எனும் எச்/சில்/சளி மாதிரி சோதனைகளை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன் மூலம் பலருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் விரைவாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே, மற்ற ஊழியர் தங்கும் விடுதிகளில் உள்ள கழிவுநீர் சோதனைகளில் கிருமி அறிகுறி இல்லை என்பதாலும் அந்த விடுதிகளில் உள்ள ஊழியர்களிடையே கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதாலும் அவற்றைக் கண்காணிக்கும் அமைப்புகளுக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.

கிருமித்தொற்று அறிகுறி இல்லாதவர்களின் மலத்திலும் கிருமிக்கான அறிகுறி தென்படக்கூடும் என்றும் அறியப்பட்டது. இந்தச் சோதனை முறை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது என்றும் இதை மேலும் விரிவுப்படுத்த திட்டம் உள்ளது என்றும் வாரியமும் உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பும் நேற்று தெரிவித்தன.