ஜூரோங் குழுத்தொகுதி: இரு எதிர்க்கட்சிகள் போட்டியிட விருப்பம்

1 mins read
90ffdc83-c3f9-4708-a19e-8a7aef52f190
படம்: கோப்புப்படம், எஸ்டி -

சிங்கப்பூரின் ஆகப் புதிய அரசியல் கட்சியான 'ரெட் டாட் யுனைடெட்' நேற்று தனது கட்சி சின்னத்தை வெளியிட்டது. அப்போது அது ஜூரோங் குழுத்தொகுதியில் போட்டியிட தனக்கு விருப்பம் உள்ளது என்று தெரிவித்தது. அதுவும் அங்கு மற்ற எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை என்றால்தான் அது சாத்தியமாகும் என்றும் அது ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தது.

"எந்தவொரு தொகுதியிலும் மும்முனை போட்டி இருக்குமானால் அங்கு ரெட் டாட் யுனைடெட் போட்டியிடாது. மற்ற எதிர்க்கட்சிகளுடன் நாங்கள் பேசி வருகிறோம். அந்த வகையில் இதுவரை எந்தக் கட்சியும் ஜூரோங் குழுத் தொகுதியில் போட்டியிடுவது பற்றி உறுதியாகத் தெரிவிக்கவில்லை.

"அப்படி அங்கு மற்ற எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை என்றால் ரெட் டாட் யுனைடெட் அங்கு தனது வேட்பாளர்களைக் களமிறக்கும்," என்றும் அந்த அறிக்கைகூறியது.

ரெட் டாட் யுனைடெட்டின் அறிக்கை வெளியான சில மணி நேரம் கழித்து மக்கள் குரல் கட்சியின் தலைவர் திரு லிம் தியென், தமது கட்சி ஜூரோங் குழுத் தொகுதியில் போட்டியிடும் என்று தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் தினத்தில் மக்கள் குரல் கட்சி அங்கு வேட்பாளர்களை நிறுத்துவது உறுதி என்றால் நாங்கள் அங்கு போட்டியிட மாட்டோம் என்று ரெட் டாட் யுனைடெட்டின் திரு ரவி பிலமோன் கூறினார்.