2ஆம் கட்ட தளர்வு: பேருந்து, ரயிலில் கிருமியைத் தடுக்க தீவிரமான ஏற்பாடுகள்

2ஆம் கட்ட தளர்வு: பேருந்து, ரயிலில் கிருமியைத் தடுக்க தீவிரமான ஏற்பாடுகள்

2 mins read
1d5f7757-b0e3-43bf-bf0b-26de104c141a
சேஃப்என்ட்ரி என்னும் மின்னியல் வருகைப்பதிவேட்டில் பயணிகள் தங்கள் வருகையைப் பதியும்படி கேட்டுக்கொள்கிறார் ரயில் நிலைய ஊழியர் படம்: கெல்வின் சிங் -

சிங்­கப்­பூ­ரில் ஜூன் 2ஆம் தேதி பொரு­ளி­யல் கட்­டுப்­பா­டு­களில் ஒரு பகுதி தளர்த்­தப்­பட்ட பிறகு பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணி­கள் எண்­ணிக்கை கூடி­யது.

குறிப்­பாக காலை உச்ச நேரத்­தில் ரயில், பேருந்­து­களில் அதி­க­மா­னோர் பய­ணம் செய்­த­தைக் காண முடிந்­தது. இந்­நி­லை­யில், நேற்று முதல் இரண்­டாம் கட்ட தளர்வு நடப்­புக்கு வந்­துள்­ளது.

பொரு­ளி­ய­லில் மேலும் பல அங்­கங்­கள் செயல்­பட அனு­ம­திக்­கப்­பட்டு உள்­ளன. இந்­நி­லை­யில் ரயில், பேருந்­து­களில் இன்னும் கூட்­டம் அதி­க­ரிக்­கக்கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதனை கருத்­தில்கொண்டு பொதுப் போக்­கு­வ­ரத்து நிறுவனங்கள் கிரு­மித்­தொற்­றைத் தவிர்த்­துக்­கொள்­வ­தற்­காக பல ஏற்­பா­டு­களை மிகவும் தீவி­ர­மாக, முழுமையாக எடுத்து வரு­கின்­றன.

பாது­காப்­பான இடை­வெளி, பாது­காப்­பாக ரயில், பேருந்­தில் ஏறிச் செல்­லும் முறை ஆகி­ய­வற்­றைப் பின்­பற்­றும்­படி பய­ணி­க­ளுக்கு எம்­ஆர்டி ரயில் நிலை­யங்­களில் போக்­கு­வ­ரத்­துத் தூது­வர்­கள் ஊக்­க­மூட்­டு­வார்­கள்.

பய­ணி­கள் முகக்­க­வ­சம் அணிந்து இருப்­பதை அவர்­கள் உறு­திப்­ப­டுத்­து­வார்­கள். மக்­கள் அதி­க­மாக தொட்டு பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பயண அட்டை பணம் நிரப்­பும் சாத­னம், மின்­ப­டிக்­கட்­டு­கள், மின்­தூக்கி பொத்­தான்­கள் ஆகி­யவை ஒவ்­வொரு 2 மணி நேரத்­துக்­கும் ஒரு தடவை கிரு­மி­நா­சினி அடித்து சுத்­தம் செய்­யப்­படும்.

ரயில் நிலை­யங்­களில் கைக­ழு­வும் திர­வம் இருக்­கும். பேருந்­து­க­ளி­லும் ரயில்­க­ளி­லும் கிரு­மி­நா­சினி பூச்­சு­மருந்து அடிக்­கப்­படும். சுத்­த­மான பழக்­க­வ­ழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிக்­கும்­படி இடை­வி­டா­மல் பய­ணி­களுக்கு அறி­விப்பு மூலம் நினைவு­படுத்­தப்­படும்.

பய­ணம் செய்­யும்­போது கைபேசி­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டாம் என்று பய­ணி­கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டுவர்.­

ரயில்­பெட்­டி­கள் நண்­ப­கல் நேரத்­தி­லும் முற்­றி­லும் சுத்­தப்­ப­டுத்­தப்­படும். போக்­கு­வ­ரத்­துத் தூது­வர்­கள் ரயில் நிலை­யங்­களில் இருந்து சுத்­த­மான பழக்­க­வ­ழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிக்­கும்­படி பய­ணி­க­ளுக்கு ஊக்­க­மூட்டி வரு­வார்­கள்.

இரவு நேரத்திலும் ரயில் வண்டிகள் சுத்தப்படுத்தப்படும்.

பேருந்து நிலையத்தில், ரயில் நிலையத்தில் உள்ள மேசைகள், பேருந்து இருக்கைகள் எல்லாம் 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை கிருமிநாசினி கொண்டு சுத்தப் படுத்தப்படும். ஒரு நாளில் நான்கு தடவை கழிவறைகள் மருந்து அடித்துச் சுத்தப்படுத்தப்படும்.

பேருந்­தின் உட்­பு­றம் நாள் ஒன்­றுக்கு இரண்டு தடவை மருந்­த­டித்­துச் சுத்­தப்­ப­டுத்­தப்­படும். பேருந்து இருக்­கை­கள், கைப்­பி­டி­கள், ஓட்­டு­நர் இடம் எல்­லாம் மருந்­த­டித்து துணி­யால் சுத்­த­மா­கத் துடைக்­கப்­படும்.

இரவு நேரத்­தில் பேருந்­து­கள் வெளிப்­பு­றத்­தி­லும் உட்­பு­றத்­தி­லும் கழுவி சுத்­தப்­ப­டுத்­தப்­படும். பேருந்து ஓட்­டு­நர்­கள் பணி தொடங்­கும்­போ­தும் மதிய சாப்­பாட்­டிற்­குப் பிறகு பணிக்கு வரும்போதும் உடல் வெப்­ப­நிலை­யைச் சரி­பார்க்க வேண்­டும்.